மாற்றுக் கட்சி வார்டுகள் புறக்கணிப்பு: அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு| Dinamalar

மாற்றுக் கட்சி வார்டுகள் புறக்கணிப்பு: அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

Added : ஆக 19, 2022 | |
மேலுார் : மேலுார் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் முகம்மது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 23 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் திவாகர், 2 வது வார்டு அ.ம.மு.க., ஆனந்த், தங்கள் வார்டில் வளர்ச்சிப் பணிகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர். பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி சேவை செய்ய வேண்டும், என்றனர்.எரிவாயு தகன மேடையை மாற்றி அமைப்பது, 2023ல் நாகம்மாள் கோயில் பாற்குடத்தை

மேலுார் : மேலுார் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் முகம்மது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 23 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் திவாகர், 2 வது வார்டு அ.ம.மு.க., ஆனந்த், தங்கள் வார்டில் வளர்ச்சிப் பணிகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

பொதுமக்களுக்கு பாரபட்சமின்றி சேவை செய்ய வேண்டும், என்றனர்.எரிவாயு தகன மேடையை மாற்றி அமைப்பது, 2023ல் நாகம்மாள் கோயில் பாற்குடத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை விடுவது, ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டிமுடித்த சந்தைக்கு அனுமதி, வார்டுகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் உள்பட 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



விவாதங்களுக்கு பதிலளித்த நகராட்சி தலைவர், ''விடுபட்ட வார்டுகளில் பணிகள் நிறைவேற்றப்படும். மயானத்தில் எல்.பி.ஜி, கியாஸ் மூலம் தகனம் செய்ய ரூ.8.70 லட்சத்தில் பணிகள் நடக்கிறது'' என்றார். கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன்,நகரமைப்பு ஆய்வாளர் சரவணக்குமார், சுகாதாரஅலுவலர் மணிகண்டன்,துணை தலைவர் இளஞ்செழியன் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X