வளைந்து நின்ற மூங்கில் கம்பில் 'நிமிர்ந்து நின்று' தேசியக்கொடி ஏற்றிய கல்லூரி முதல்வர்: குவியும் கண்டனம்

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு கவின் கல்லுாரியில், கொடி மரம் இல்லாத நிலையில், வளைந்து நின்ற மூங்கில் குச்சியில், நாற்காலி போட்டு ஏறி நிமிர்ந்து நின்று தேசியக் கொடியை ஏற்றிய கல்லுாரி முதல்வரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கடந்த 1887ம் ஆண்டு சென்னை மாகாண அரசாங்கத்தால், கைவினைத் தொழில் பள்ளியாக கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. பின்னர், கும்பகோணம் நகராட்சி
வளைந்து நின்ற மூங்கில்,  தேசியக்கொடி, கல்லூரி முதல்வர், கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு கவின் கல்லுாரியில், கொடி மரம் இல்லாத நிலையில், வளைந்து நின்ற மூங்கில் குச்சியில், நாற்காலி போட்டு ஏறி நிமிர்ந்து நின்று தேசியக் கொடியை ஏற்றிய கல்லுாரி முதல்வரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1887ம் ஆண்டு சென்னை மாகாண அரசாங்கத்தால், கைவினைத் தொழில் பள்ளியாக கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. பின்னர், கும்பகோணம் நகராட்சி கலைப்பள்ளியாக சுமார் 80 ஆண்டு காலம் செயல்பட்டது. வண்ணக்கலை, சிறப்பக்கலை, விளம்பரக்கலை ஆகிய துறைகள் உருவாக்கப்பட்டன. 1965ல் தமிழக அரசின் தொழில் வர்த்தக இயக்கத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. 1973 முதல் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பாடத்திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன. 1979ல் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு கவின் கலைகல்லுாரியாக இயங்கி வருகிறது. 1991 முதல் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு துவங்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகள் பழைமையான இக்கல்லுாரியில், ஓவியர் கோபுலு, கலை கங்கா, வீர சந்தானம், என்.எஸ்.மனோகரன், சிவபாலன் உள்ளிட்டோர் படித்துள்ளனர். தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.


latest tamil news


இத்தகையை புகழ்பெற்ற கல்லுாரியில், கடந்த ஆகஸ்ட்15 ம் தேதி சுதந்திர கொடியேற்ற விழாவின் போது, கல்லுாரியில் கொடி மரம் இல்லாத நிலையில், கல்லுாரி முதல்வர் அருளரசன், கொடி மரத்திற்கு பதிலாக வளைந்து நின்ற மூங்கில் குச்சியில் கொடியை கட்டியபடி, மேசையும் அதன் மீது நாற்காலியும் போட்டு ஏறி நின்று கொடி ஏற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனமும், முன்னாள் மாணவர்கள் வேதனையும் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது; தேசியக்கொடியை ஏற்றும் போது, கொடி மரம் 90 டிகிரி நேராக இருக்க வேண்டும். கொடி ஏற்றிய பிறகு முறையாக அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். ஆனால், கவின் கல்லுாரி முதல்வர் தேசியக்கொடியை ஏனோதானோ என ஏற்றி விட்டு, முறையாக மரியாதையும் செலுத்தவில்லை. மேலும், அருகில் இருந்த பேராசிரியர்களும் முறையாக மரியாதை செலுத்தவில்லை. இது மிகவும் கண்டனத்திற்குரியது. பாரம்பரிய மிக்க ஒரு கல்லுாரி முதல்வரின் செயல்பாடு இன்று கேலிக்குத்தாக மாறியுள்ளது. அரசு உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

முன்னாள் மாணவர்கள் கூறியதாவது; கொடி மரம் நடக்கூட அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தேசியக்கொடியை ஏற்றும் விதி கூட தெரியாத முதல்வராக உள்ளார். மாபெரும் ஓவிய கலைஞர்கள், எழுத்தாளர்கள், சினிமா துறையில் கலை இயக்குனர்கள் உருவாகும் இடமான கல்லுாரியில் முதல்வரின் செயல் முன்னாள் மாணவர்களான எங்களுக்கு மிகவும் அவமானமாகவும், வேதனையாகவும் உள்ளது என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஆக-202206:49:50 IST Report Abuse
Bhaskaran அவரு ஒருவேளை சீமான் கட்சி யாக இருக்கலாம்
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
19-ஆக-202220:26:19 IST Report Abuse
nagendirank சுதந்திரம் வாங்கியபோது நிமிர்த்து நின்று பட்டொளி வீசியது . தற்போது அதே சுதந்திரம் வளைந்து விட்டது அதுதான் இவர் செய்தார் போலும்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஆக-202217:35:48 IST Report Abuse
r.sundaram நமது அரசுகளே இப்படித்தான், யானை கொடுப்பார்கள் ஆனால் தொரட்டி கொடுக்கமாட்டார்கள் என்பதுபோல், கல்லூரி நடத்துவார்கள், கொடியேற்றவும் சொல்வார்கள், ஆனால் கொடிமரம் நடுவதற்கு நிதி ஒதுக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X