'குழந்தைகள் இல்லம், மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை

Added : ஆக 19, 2022 | |
Advertisement
'தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, விடுதிகளுக்கான உரிமையாளர்கள் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பேசியதாவது:அரசு குழந்தைகள் இல்லங்கள், மகளிருக்கான தங்கும் விடுதிகளை கட்டாயம் பதிவு செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண்கள், குழந்தைகள், வளர்இளம்பெண்கள், சிறார் இல்லங்கள் மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள்

'

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, விடுதிகளுக்கான உரிமையாளர்கள் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பேசியதாவது:
அரசு குழந்தைகள் இல்லங்கள், மகளிருக்கான தங்கும் விடுதிகளை கட்டாயம் பதிவு செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண்கள், குழந்தைகள், வளர்இளம்பெண்கள், சிறார் இல்லங்கள் மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்கியுள்ளவர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு நலனுக்காக வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலன், சத்துணவு திட்டத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், 18 வயதுக்கு உட்பட்ட மற்றும், 18 வயதுக்கு மேற்பட்ட வளர்இளம் பெண்கள் பணிபுரியும் பெண்கள் விடுதிகளை, மாவட்ட சமூக நல அலுவலர் மூலம், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் விடுதிகள் உரிய விதிகளை பின்பற்றி, விடுதி நடத்தும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் காலாவதியானால் அதை புதுப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தைகள், பணிபுரியும் பெண்கள் விடுதி நடத்தும் அனைவரும் வரும், 31க்குள், https://www.tnswp.com என்ற இணையதள முகவரியில் உரிய சான்றிதழ்களுடன் பதிவு செய்தல், புதுப்பிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X