சென்டர் மீடியனில் போஸ்டர் ஒட்டினால் சட்ட நடவடிக்கை

Added : ஆக 19, 2022 | |
Advertisement
சாலை சென்டர் மீடியனில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரியாஸ் முகமது தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரியில், நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை, காந்தி சாலை, வி.சி.சி., சாலை (பெங்களூரு சாலை), ராணிப்பேட்டை சாலை, பர்கூர்


சாலை சென்டர் மீடியனில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரியாஸ் முகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரியில், நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலை, காந்தி சாலை, வி.சி.சி., சாலை (பெங்களூரு சாலை), ராணிப்பேட்டை சாலை, பர்கூர் மாநில சாலை, பர்கூர் - திருப்பத்துார் சாலை மற்றும் மாவட்ட இதர சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் சென்டர் மீடியன் சுவர்களில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
சென்டர் மீடியனில் வரையப்பட்ட கறுப்பு, வெள்ளை பட்டைகளை மறைத்து, சிலர் சுய லாபத்திற்காக விளம்பரம் செய்வதால், வாகன ஓட்டிகளின் கவனம் குறைந்து விபத்து நடக்கிறது. இனிவரும் காலங்களில் நெடுஞ்சாலைத்துறையின் தடுப்புகளில் விளம்பரம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், விளம்பரங்களை சுத்தம் செய்யவும், புதுப்பிக்கவும் தேவையான தொகையும் வசூலிக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X