பெருநிறுவனங்கள் குறைந்தபட்ச லாபம் கூட வழங்குவதில்லை; முத்தரப்பு கூட்டத்தில் புகார்| Dinamalar

பெருநிறுவனங்கள் குறைந்தபட்ச லாபம் கூட வழங்குவதில்லை; முத்தரப்பு கூட்டத்தில் புகார்

Added : ஆக 19, 2022 | |
செலவுகள், முதலீடுகள் அதிகரித்த போதும், ஆர்டர்களுக்கு பெருநிறுவனங்கள் குறைந்தபட்ச லாபம் கூட வழங்குவதில்லை என, முத்தரப்பு கூட்டத்தில், சிறு குறு நிறுவனத்தினர் புகார் தெரிவித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஓசூரிலுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள், கார்ப்பரேட் மற்றும் பெருநிறுவனங்களுக்கான முத்தரப்புக்கூட்டம், மாவட்ட


செலவுகள், முதலீடுகள் அதிகரித்த போதும், ஆர்டர்களுக்கு பெருநிறுவனங்கள் குறைந்தபட்ச லாபம் கூட வழங்குவதில்லை என, முத்தரப்பு கூட்டத்தில், சிறு குறு நிறுவனத்தினர் புகார் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஓசூரிலுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள், கார்ப்பரேட் மற்றும் பெருநிறுவனங்களுக்கான முத்தரப்புக்கூட்டம், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில், ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முதலீடுகள் மற்றும் செலவுகள் பலமடங்கு அதிகரித்த போதிலும், கடந்த, 15 ஆண்டுகளாக கார்ப்பரேட் தொழில்கள் மூலம், அவர்களின் தயாரிப்பு பொருட்கள் மற்றும் ஆர்டர்களுக்கு நியாயமான விலை மற்றும் குறைந்தபட்ச லாபம் கூட வழங்கவில்லை என, ஓசூர் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவன சங்க பிரதிநிதிகள் கூறினர்.
இது குறித்து, பெரு நிறுவன சங்க பிரதிநிதிகளும், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களான அசோக் லேலண்ட், டி.வி.எஸ்., டைட்டான் மற்றும் ஓசூரிலுள்ள மற்ற பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசுகையில், ''பெருநிறுவனங்கள், தங்களிடையே கலந்து பேசி, சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட தொழிலக மற்றும் பாதுகாப்பு இணை இயக்குனர் சபீனா, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், ஹோஸ்டியா சங்க தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X