போலீஸ் டைரி - ஈரோடு| Dinamalar

போலீஸ் டைரி - ஈரோடு

Added : ஆக 19, 2022 | |
காங்கேயத்தில் தொழிலாளி, ஊதியூரில் விவசாயி தற்கொலைகாங்கேயம்: காங்கேயம், சத்யாநகர் பகுதியை சேர்ந்த சிபி,27; திருமணமான இவர் மூன்று ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். மனமுடைந்த சிபி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மது குடித்து விட்டு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஊதியூர் அருகே

காங்கேயத்தில் தொழிலாளி,
ஊதியூரில் விவசாயி தற்கொலை
காங்கேயம்: காங்கேயம், சத்யாநகர் பகுதியை சேர்ந்த சிபி,27; திருமணமான இவர் மூன்று ஆண்டுகளாக மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். மனமுடைந்த சிபி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மது குடித்து விட்டு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊதியூர் அருகே வடசின்னாரிபாளையம் காட்டுபாளையம் பகுதியை சேர்ந்த செல்லமுத்து,50; திருமணமான இவர் விவசாயம் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான அவர், அதிலிருந்து மீள முடியாமல் மனமுடைந்து,நேற்று முன்தினம் தன் தோட்டத்தில் இருந்த பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டு பூட்டை உடைத்து
ரூ.2.50 லட்சம் திருட்டு
அந்தியூர்: அந்தியூர் - பர்கூர் சாலையில், பர்கூர் வனத்துறை அலுவலகம், எதிரே குடியிருப்பவர் கம்யூ.,கட்சி பிரமுகர் பழனிச்சாமி, 50; மீன் வியாபாரம் செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன், கொளத்தூரில் உள்ள தன் மாமா வீட்டிற்குசென்றார். நேற்று காலை, 8:00 மணி அளவில், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த பழனிச்சாமி, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 2.50 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைதிருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
27 பேர் மீது வழக்குப்பதிவு
காங்கேயம்: காங்கேயத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரைப்பட சண்டை மாஸ்டர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீஸ் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட, 27 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட, 27 பேர் மீதும் காங்கேயம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகன் மாயம்: தந்தை புகார்
ஈரோடு: ஈரோடு நசியனுார் ராயபாளையம் மரம்புளியன் தோட்டத்தை சேர்ந்தவர் மாதேவன். இவர் மகன் ஸ்ரீதர், 14; நசியனுார் பாரதி கல்வி நிலையத்தில் எஸ்.எஸ்.எல்.சி படிக்கிறார். கடந்த, 15ம் தேதி காலை பள்ளிக்கு சென்று விட்டு மதியம், 1:00 மணிக்கு வீடு
திரும்பினார்.
பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பினர். அப்போது ஸ்ரீதர் வீட்டில் இல்லை. மகள் பிருந்தா மட்டும் இருந்துள்ளார். மகன் குறித்து கேட்டுள்ளனர்.
மாலை, 4:00 மணிக்கு ஹீரோ ஹோண்டா பைக்கை எடுத்து கொண்டு வெளியே சென்றதாக தெரிவித்தார். இரவு வெகு நேரமாகியும் ஸ்ரீதர் வீடு திரும்பவில்லை.
அக்கம், பக்கம், நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் ஸ்ரீதர் குறித்து தகவல் இல்லை. இதுகுறித்து மாதேவன், ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X