வனப்பகுதியில் அத்து மீறி நுழைந்த இருவருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம்| Dinamalar

வனப்பகுதியில் அத்து மீறி நுழைந்த இருவருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம்

Added : ஆக 19, 2022 | |
வனப்பகுதியில் அத்து மீறி நுழைந்த இருவருக்கு, 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட கோட்டமாளம் பகுதியில், ஆக.,15ம் தேதி திம்மையன் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது கரடி தாக்கியது. அவரை மீட்டு, கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகர் தினேஷ் தலைமையில், திம்மையனுடன் சென்ற நாராயணன் என்பவரை தீர


வனப்பகுதியில் அத்து மீறி நுழைந்த இருவருக்கு, 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட கோட்டமாளம் பகுதியில், ஆக.,15ம் தேதி திம்மையன் மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது கரடி தாக்கியது. அவரை மீட்டு, கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகர் தினேஷ் தலைமையில், திம்மையனுடன் சென்ற நாராயணன் என்பவரை தீர விசாரித்ததில் சம்பவம் நடந்த இடத்தை காட்ட சொன்னதற்கு அடர்ந்த வனப்பகுதிக்கு கூட்டி சென்று காட்டியுள்ளார்.
வனத்துறை மூலம் நிவாரணம் கிடைக்கும் என திட்டம் போட்டு அடர் வனத்தில் நடந்த சம்பவத்தை பொய்யாக பட்டா நிலத்தில் மாடு மேய்த்துகொண்டிருந்த போது கரடி தாக்கியதாக கூறியுள்ளார்.
சம்பவம் நடந்தது கேர்மாளம் வனச்சரகத்திற்குற்பட்ட குத்தியாலத்தூர் காப்புக் காட்டில். இச்சம்பவம் தொடர்பாக ஆசனூர் வனக்கோட்ட துனை இயக்குநர் தேவேந்திர குமார் மீனாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் உத்தரவின் படி, பாதுகாக்கப்பட்ட காப்புக் காட்டில் அத்துமீறி சட்ட விரோதமாக உள்ளே சென்ற திம்மையன், நாராயணன் மீது தமிழ்நாடு வனச்சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரிடமிருந்து இணக்கக்கட்டணம் 45ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X