காவிரியில் குறைந்த வெள்ளம்; காலியான முகாம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்து, இயல்பு நிலை திரும்பியதால் முகாம்களில் தங்கி இருந்தவர்கள், இரு வாரங்களுக்கு பின் வீடுகளுக்கு திரும்பினர்.கர்நாடகா மாநிலத்தில் பெய்த கன மழையால் நீர் வராது அதிகரித்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. கடந்த ஜூலை, 16ல் உபரி நீர் திறக்கப்பட்டது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்து, இயல்பு நிலை திரும்பியதால் முகாம்களில் தங்கி இருந்தவர்கள், இரு வாரங்களுக்கு பின் வீடுகளுக்கு திரும்பினர்.
கர்நாடகா மாநிலத்தில் பெய்த கன மழையால் நீர் வராது அதிகரித்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. கடந்த ஜூலை, 16ல் உபரி நீர் திறக்கப்பட்டது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஓரிரு நாளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கரையோர மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மீண்டும் கடந்த, 1 முதல் உபரி நீர் திறக்கப்பட்டது. அதிகப்பட்சமாக வினாடிக்கு, 2.10 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றினர். அதேநேரம், பவானிசாகர் அணையிலும் உபரி நீர் திறந்ததால், அதிக வெள்ளத்தால், கொடுமுடி பகுதி காவிரி ஆறு, அதனை ஒட்டிய புகலுாரான் வாய்க்காலிலும் வெள்ளம் கரை புரண்டது. தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கொடுமுடியில் வடக்குத்தெரு, இலுப்புத்தோப்பு பகுதி என, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு மற்றும் அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காவிரியில் நீர் திறப்பு குறைந்து நேற்று காலை, 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகரில் இருந்து பவானி ஆற்றில், 1,400 கனஅடியே வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளம் வற்றியது. 15 நாட்களாக முகாமில் தங்கியவர்கள் நேற்று முழுமையாக தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X