அங்கன்வாடி மையம் பழுது பணியில் முறைகேடு கடிதம் கேட்டு அதிர்ச்சி தந்த ஒப்பந்ததாரர்| Dinamalar

அங்கன்வாடி மையம் பழுது பணியில் முறைகேடு கடிதம் கேட்டு அதிர்ச்சி தந்த ஒப்பந்ததாரர்

Added : ஆக 19, 2022 | |
கரூர் மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணிக்கு, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முறையாக வேலை செய்யாமல், ஒப்பந்ததாரர் கடிதம் கேட்டதால், மைய பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எஸ். வெள்ளாளப்பட்டி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 20 மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையம் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்து.

கரூர் மாநகராட்சி அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணிக்கு, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முறையாக வேலை செய்யாமல், ஒப்பந்ததாரர் கடிதம் கேட்டதால், மைய பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எஸ். வெள்ளாளப்பட்டி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 20 மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையம் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்து. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில், 2 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த மே மாதம் டெண்டருக்கு ஒப்புதல் பெறப்பட்டு வேலை நடந்து வந்தது. ஆனால், முறையாக பணிகளை முடிக்காமல், அங்கன்வாடி மையம் பணியாளரிடம் கடிதம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து, 14வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் கூறியதாவது:
இந்த மைய கட்டிடம் மோசமான நிலையில் இருந்தால், பழுது பார்க்கும் பணி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி, 3 மாதங்களாக பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அங்கு, 20க்கு 15 அறை தரைக்கு டைல்ஸ் ஒட்டி, சுவர்களுக்கு பெயிண்ட் அடித்து வேலை மட்டும் செய்தார். அதில் கூட, பில் எழுத வேண்டும் என்பதற்கான கட்டி விரிசல் கூட பூசாமல், சுவற்றில் பெயிண்ட் அடித்துள்ளார்.
கழிப்பறை உட்பட எந்தவிதமான பழுது நீக்கும் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அந்த கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. செப்டிக் டேங்க் திறந்து கிடக்கிறது. அதில், குழந்தைகள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், குழந்தைகள் தொடும் துாரத்தில் மின் மீட்டர் உள்ளது.
இதுபோன்ற எந்தவிதமான பராமரிப்பு வேலைகளை செய்யாமல், பணிகள் முறையாக செய்யப்பட்டு உள்ளதாக கடிதத்தை ஒப்பந்ததாரர் கோரியது, அங்கன்வாடி பணியாளர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கரூர் மாநகராட்சி அனைத்து பணிகளில் தொடர் முறைகேடு நடந்து வரும் நிலையில், ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இவ்வாறு, அவர், கூறினார்.
இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் ரவிசந்திரனிடம் கேட்ட போது, ''அது பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X