கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானத்துக்கு எதிராக அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் மட்டும் வெளிநடப்பு

Added : ஆக 19, 2022 | |
Advertisement
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் வெளிநடப்பு செய்த நிலையில், மற்றொருவர் உள்ளே இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாநகராட்சி அலுவலகரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானத்துக்கு எதிராக அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் மட்டும் வெளிநடப்புகரூர், ஆக. 19-- கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் வெளிநடப்பு

கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் வெளிநடப்பு செய்த நிலையில், மற்றொருவர் உள்ளே இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சி அலுவலகரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானத்துக்கு எதிராக
அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் மட்டும் வெளிநடப்பு
கரூர், ஆக. 19--
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் வெளிநடப்பு செய்த நிலையில், மற்றொருவர் உள்ளே இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் அவசர கூட்டம் நடந்தது. மேயர் கவிதா தலைமைவகித்தார். இதில், கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் வகையில், 62.50 கோடி ரூபாய் நிதியில் மாநகராட்சி கூட்டத்தில், ஒப்பந்ததாரர் தேர்வு கோரிய தீர்மானம் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக நடந்த விவாதம்: கவுன்சிலர்(அ.தி.மு.க.,) சுரேஷ்: அ.தி.மு.க., ஆட்சியில், தோரணக்கல்பட்டியில் உள்ள அரசு சொந்தமான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் கொண்டுவரப்பட்டது. ஆனால், திருமாநிலையூரில் தனியார் சொந்தமான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் தொடங்கப்பட உள்ளது. இதில், தனியார் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில், தி.மு.க., அரசு செயல்படுகிறது.
மேயர் கவிதா: கடந்த காலத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொண்டு வந்த திட்டங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் இடம் மாற்றம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நீங்கள், 200 ஏக்கர் இடம் வாங்கி விட்டு, பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. வராத பஸ் ஸ்டாண்ட் இடத்திற்கு டெண்டர் விடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் வெளிநடப்பு செய்தார். மற்றொரு அ.தி.மு.க., கவுன்சிலர் தினேஷ் வெளிநடப்பு செய்யாமல், தொடர்ந்து தன் வார்டு குறித்து கேள்வி எழுப்பினார்.
திருமாநிலையூர் பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முரண்பாடான முடிவால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்.கத்தில் கவுன்சிலர்கள் அவசர கூட்டம் நடந்தது. மேயர் கவிதா தலைமைவகித்தார். இதில், கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் வகையில், 62.50 கோடி ரூபாய் நிதியில் மாநகராட்சி கூட்டத்தில், ஒப்பந்ததாரர் தேர்வு கோரிய தீர்மானம் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக நடந்த விவாதம்: கவுன்சிலர்(அ.தி.மு.க.,) சுரேஷ்: அ.தி.மு.க., ஆட்சியில், தோரணக்கல்பட்டியில் உள்ள அரசு சொந்தமான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் கொண்டுவரப்பட்டது. ஆனால், திருமாநிலையூரில் தனியார் சொந்தமான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் தொடங்கப்பட உள்ளது. இதில், தனியார் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில், தி.மு.க., அரசு செயல்படுகிறது.
மேயர் கவிதா: கடந்த காலத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொண்டு வந்த திட்டங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் இடம் மாற்றம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நீங்கள், 200 ஏக்கர் இடம் வாங்கி விட்டு, பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. வராத பஸ் ஸ்டாண்ட் இடத்திற்கு டெண்டர் விடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் வெளிநடப்பு செய்தார். மற்றொரு அ.தி.மு.க., கவுன்சிலர் தினேஷ் வெளிநடப்பு செய்யாமல், தொடர்ந்து தன் வார்டு குறித்து கேள்வி எழுப்பினார்.
திருமாநிலையூர் பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முரண்பாடான முடிவால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X