டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி: வரும் 22ல் துவக்கம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
'டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும், 22ம் தேதி முதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்குகிறது' என, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித்

'டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும், 22ம் தேதி முதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்குகிறது' என, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 92 பணிக்காலியிடங்கள் கொண்ட, குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த, ஜூலை, 21 முதல், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும், 22ம் தேதி முதல் துவங்குகிறது.
இப்பயிற்சி வகுப்பு, வாரநாட்களில் (திங்கள்-வெள்ளி), மதியம், 2:00 முதல், 5:00 மணி வரை நடக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களின் விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, onlineclassnkl@gmail.com, mailto:onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து, பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X