விபத்தில் வாலிபர் சாவு: உறவினர்கள் மறியல்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், வாலிபர் இறந்தததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராசிபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சடையன் மகன் மணிகண்டன், 22, இவர் நேற்று முன்தினம் இரவு, நாமகிரிப்பேட்டையில் இருந்து வரும்போது, அரசு பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அந்த வாகனமும் நிற்காமல் சென்று விட்டது.

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், வாலிபர் இறந்தததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சடையன் மகன் மணிகண்டன், 22, இவர் நேற்று முன்தினம் இரவு, நாமகிரிப்பேட்டையில் இருந்து வரும்போது, அரசு பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அந்த வாகனமும் நிற்காமல் சென்று விட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அங்கு வந்த உறவினர்கள், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை, உடனே அடையாளம் கண்டுபிடித்து, டிரைவரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, ராசிபுரம் பழைய பஸ்நிலையம் அருகே, சேலம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு, 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசிபுரம் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, மறியலை கைவிட வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X