"பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தூக்க மாத்திரை வழங்கக்கூடாது

Added : ஆக 19, 2022 | |
Advertisement
''மாணவ, மாணவியருக்கு துாக்க மாத்திரை வழங்கக்கூடாது' என, மருந்து வணிகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சேலம் மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சார்பில், ஓமலுாரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் கந்தசாமி தலைமை வகித்தார்.அதில் மாவட்ட தலைவர் செந்தில்வடிவேல் பேசியதாவது:அங்கீகரிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகளை மட்டும்

''மாணவ, மாணவியருக்கு துாக்க மாத்திரை வழங்கக்கூடாது' என, மருந்து வணிகர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சார்பில், ஓமலுாரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் கந்தசாமி தலைமை வகித்தார்.
அதில் மாவட்ட தலைவர் செந்தில்வடிவேல் பேசியதாவது:
அங்கீகரிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகளை மட்டும் வாங்கி விற்க வேண்டும். விலையை குறைத்து சந்தைக்கு கொண்டு வரும் மருந்துகளை வாங்கி விற்கக்கூடாது. முறையாக உரிமம், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும். கடை ஊழியர்கள் தவறு செய்தால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்களுக்கு, மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல், துாக்க மாத்திரை வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். ஓமலுார் வட்டார மருந்து ஆய்வாளர் கார்த்திகேயன், ஓமலுார், காடையாம்பட்டி, தாரமங்கலம் பகுதிகளில் உள்ள மருந்து வணிகர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X