வரும் 31ல் சதுர்த்தி எதிரொலி விநாயகர் சிலை விலை உயர்வு

Added : ஆக 19, 2022 | |
Advertisement
வரும், 31ல் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா வரும், 31ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சேலம் டவுன், தேர் வீதி பகுதியில் விதவித விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சேலம் மாநகர், மாவட்ட பகுதிகளில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு


வரும், 31ல் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும், 31ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சேலம் டவுன், தேர் வீதி பகுதியில் விதவித விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சேலம் மாநகர், மாவட்ட பகுதிகளில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு சிலைகள் விலை சற்று உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட மண்பாண்ட குலாலர் விநாயகர் சிலைகள் தயாரிப்பு, விற்பனையாளர் சங்க துணைத்தலைவர் கண்ணன் கூறியதாவது:
கொரோனா காலகட்டத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, 3 அடிக்குட்பட்ட சிலைகள் மட்டும் விற்கப்பட்டதால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த ஆண்டு, கொரோனா குறைந்து கட்டுப்பாடு இல்லாததால், சிலைகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த, 1 முதல், கடைகளில் சிலைகளை வைத்துள்ள்ளோம்.
ஜல்லிக்கட்டு, தர்பார், மூஷிக வாகனம், பால, சிங்கம் உள்பட பல்வேறு விதங்களில், அரை அடி முதல், 8 அடி வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. 3 அடிக்கு கீழ் உள்ள சிலைகள் மண்ணாலும், 4 அடிக்கு மேல் உள்ள சிலைகள், பேப்பர் கூழ், கிழங்கு மாவிலும் தயாரிக்கப்பட்டது. சிலைகளை மக்கள்
ஆர்வமாக வாங்குகின்றனர்.
அரை அடி உயரத்தில் மண்ணால் செய்யப்பட்ட சிலை, 70 முதல், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் முக்கால் அடி, 100 - 150; ஒரு அடி, 250 - 300; ஒன்றரை அடி - 400 - 500; 2 அடி, 1,300 - 1,500; 3 அடி, 2,000 - 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பேப்பர் கூழ் விநாயகர் விலை, 4 அடி உயரம், 3,500 முதல், 4,500க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 5 அடி, 6,500 - 7,000; 6 அடி, 8,000 - 8,500; 7 அடி, 9,000 - 10 ஆயிரம்; 8 அடி - 10 ஆயிரம் முதல், 11 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பால், சிலைகள் விலை, 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X