16 வயது சிறுமி கருமுட்டை விற்பனை 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

Added : ஆக 19, 2022 | |
Advertisement
ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்ற விவகாரத்தில், சிறுமியின் தாய் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை, 8 முறை எடுத்து ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருச்சி, திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் விற்றதாக சிறுமியின் தாய், பெயின்டரான அவரது வளர்ப்பு தந்தை, புரோக்கரான ஈரோடு


ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்ற விவகாரத்தில், சிறுமியின் தாய் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
செய்யப்பட்டனர்.
ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டையை, 8 முறை எடுத்து ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருச்சி, திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் விற்றதாக சிறுமியின் தாய், பெயின்டரான அவரது வளர்ப்பு தந்தை, புரோக்கரான ஈரோடு கைகாட்டிவலசு திருவள்ளுவர் நகரை சேர்ந்த கந்தசாமி மனைவி மாலதி, 37, சிறுமிக்கு போலியாக ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜான் பெனடிக், 25, ஆகியோர் மீது ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பெண்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வளர்ப்பு தந்தை கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியை இவர், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. ஜான், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் கோவை
மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறுமி, ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்ட நால்வரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, ஈரோடு சூரம்பட்டி போலீசார், எஸ்.பி., ஆகியோர், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு பரிந்துரை செய்தனர்.
இதை ஏற்று நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருக்கும் வளர்ப்பு தந்தையை போலீசார் கோவை மத்திய சிறைக்கு நேற்று காலை அழைத்து சென்றனர்.
அங்கு சூரம்பட்டி போலீசார் நால்வருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான கலெக்டர் உத்தரவு நகலை
வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X