தேசிய கீதம் பாடும் முன் சூயிங்கம்மை துப்பிய ராகுல்..! வைரலாகும் வீடியோ

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கும் முன் வாயில் இருந்து சூயிங் கம்மை வெளியே எடுத்து போட்ட ராகுலுக்கு பாராட்டுகள் குவிகிறது. இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று துவங்கியது. ஹராரேவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நீண்ட
Social Media, Viral, Twitter, KL Rahul, Winning Captain, India, இந்தியா, ஜிம்பாப்வே, கிரிக்கெட், ராகுல், வீடியோ, வைரல்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கும் முன் வாயில் இருந்து சூயிங் கம்மை வெளியே எடுத்து போட்ட ராகுலுக்கு பாராட்டுகள் குவிகிறது.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று துவங்கியது. ஹராரேவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின், லோகேஷ் ராகுல் இந்திய அணிக்கு திரும்பினார்.

கேப்டனாக களமிறங்கிய ராகுல், முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஜிம்பாப்வே அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் சுப்மன், தவான் ஜோடி பேட்டிங்கில் அசத்த விக்கெட் இழப்பின்றி 192 ரன் குவித்து பெற்றது. பேட்டிங் செய்யும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைக்கவில்லை எனினும், மேட்ச் துவங்கும் போது ராகுலின் செயல் ஒன்று ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்து கொண்டாட வைத்தது.

பொதுவாக போட்டி துவங்கும் முன் மைதானத்தில் இரண்டு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்படும். அப்போது வரிசையாக நின்று வீரர்கள் மரியாதை செலுத்துவர். நேற்றைய போட்டியின் போது, அதே போன்று நம் நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படும் முன், ராகுல் வாயில் இருந்த சூயிங்கம்மை உடனடியாக கைகளில் எடுத்து வெளியே போடுகிறார். ராகுலின் இந்த 7 வினாடி வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிவிட்டர் பயனர் ஒருவர், 'உன்னை கண்டு பெருமை கொள்கிறோம்' என பதிவிட்டுள்ளார். மற்றொவர், 'அவர் உண்மையிலே ஒரு ஜென்டில்மேன்' என பதிவிட்டார். முன்னதாக 2017 ,2022 ஜனவரியில் விராட் கோஹ்லி,தேசிய கீதம் பாடும் போது சூயிங் கம்மை மென்று கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


latest tamil news


இதே போன்று, கண்களை மூடிகொண்டு தேசிய கீதம் பாடும் சமயத்தில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிசானை தேனீ ஒன்று தாக்க வரும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
19-ஆக-202216:32:09 IST Report Abuse
Manguni ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X