முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி அதிர்ச்சி

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
சென்னை: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமானது. இதனால், அதிர்ச்சியடைந்த நீதிபதி , மாயமான ஆவணங்களில் நகலை வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, மாவட்ட எல்லை ஒன்றில் பெண் ஐ.பி.எஸ்.,
சிறப்பு டிஜிபி,பாலியல் வழக்கு, ஆவணங்கள் மாயம்,

சென்னை: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமானது. இதனால், அதிர்ச்சியடைந்த நீதிபதி , மாயமான ஆவணங்களில் நகலை வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, மாவட்ட எல்லை ஒன்றில் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி புஷ்பராணி முன் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் பெண் அதிகாரி ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சியங்கள் 5 பேர் ஆஜராகினர்.


latest tamil news



இந்நிலையில், பெண் அதிகாரி சார்பில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக தெரியவருகிறது. சிறப்பு டிஜிபி - பெண் அதிகாரிக்கு இடையிலான ஆடியோ உரையாடல் , வாட்ஸ் ஆப் செய்தி ஆகியன மாயமாகி உள்ளது. மாயமான நகலை வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஆக-202207:36:13 IST Report Abuse
Girija இந்த சிறப்பு சர்விஸ் முழுவது டிபார்ட்மெண்டில் அடிதடி அதிகார துஸ்பிரயோகம் என்று பெயரெடுத்தவர். தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் எந்த அதிகாரியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க துணிந்தததில்லை , ஒரிசா கேடேரில் மனைவியை ஐ ஏ எஸ் ஆக்கி பதவியில் அமர்த்தியவர் . இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்துகொண்டு கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு விசாரணைக்கு வராமல் மட்டம் போட்டு கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
20-ஆக-202202:20:16 IST Report Abuse
John Miller . முழு பைலும் காணாமல் போவதெற்கு முன்பு நீதிபதி சீக்கிரம் இந்த வலக்கை முடிக்க வேண்டும். ஈ பீ எஸ், ஓபிஎஸ் வலக்கை இரண்டு நாளில் விசாரித்து தீர்ப்பு சொல்ல முடியும் என்றால், ஒரு பெண் மானம் சம்பத்தப்பட்ட வலக்கை இரண்டு மாதத்திற்குள் விசாரிக்க முடியாதா?
Rate this:
Cancel
20-ஆக-202201:03:44 IST Report Abuse
வீரா தலைமை சிரிப்பு போலீஸ் அதிகாரி அவர் பாட்டுக்கு சைக்கிள் ஓட்டிட்டு மிக்ஸர் சாப்டுட்டு நிம்மதியா இருப்பார். யாரும் அவரை தொந்தரவு செய்யாதீங்க ப்ளீஸ் 😄.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X