சென்னை மாநகர பஸ்களின் இருக்கைகளில் விளம்பரம்| Dinamalar

சென்னை மாநகர பஸ்களின் இருக்கைகளில் விளம்பரம்

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (5) | |
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்தின் கழகத்தின் வருமானத்தை பெருக்கும் வகையில் பஸ்சின் இரு பக்கங்களில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பஸ்சின் 2 பக்கங்களிலும் விளம்பரம் செய்யப்படுவது போல், சென்னை மாநகர பஸ்களிலும் விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆயிரம் பஸ்களில் விளம்பரம் செய்ய டெண்டர்
 சென்னை மாநகர பஸ், பஸ் விளம்பரம், Chennai City Bus, Bus Advertisement,

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்தின் கழகத்தின் வருமானத்தை பெருக்கும் வகையில் பஸ்சின் இரு பக்கங்களில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் பஸ்சின் 2 பக்கங்களிலும் விளம்பரம் செய்யப்படுவது போல், சென்னை மாநகர பஸ்களிலும் விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆயிரம் பஸ்களில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.
500 பஸ்களில், இருக்கைகளின் பின்புறம் 'ஏ4' அளவில் விளம்பரம் செய்யும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஆயிரம் பஸ்களில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது மாநகர பஸ்களில் டிரைவர் இருக்கைக்கு பின்புறமும், பஸ் பின்புறமும் விளம்பரம் செய்யப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X