இந்தியாவுடன் நல்லுறவு, காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு: பாக்., பிரதமர் விருப்பம்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தி: பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம், மற்றும்
Pak PM ,Sharif ,peaceful tie, India, Kashmi,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தி: பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம், மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காண விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும். தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இது முக்கியம். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அது மேலும் விரிசல் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என பல முறை மத்திய அரசு உறுதியுடன் கூறியுள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த, அமைதியான, பயங்கரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட வேண்டும். அதனை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும் என பல முறை இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
19-ஆக-202220:38:43 IST Report Abuse
BALU காஷ்மீர் பிரச்சினையை இந்தியா பார்த்துக் கொள்ளும்.இன்னும் சிலகாலங்களுக்குள் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக உடையப் போகிறது.அதைத் தடுக்க ஏதாவது செய்யமுடியுமா என்று பாருங்கள் மிஸ்டர் ஷெரீப்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
19-ஆக-202220:15:22 IST Report Abuse
தமிழ்வேள் பிற மதங்கள் ,கொள்கைகள் ,மக்கள் , வேதங்கள் குறித்து [குறிப்பாக , ஹிந்து , பாரதம் , சனாதன , ஜைன சீக்கிய பௌத்த தர்மங்கள் ], இஸ்லாமின் பார்வை மாறி ,மதம்மாற்றுதல் ,கொலை கொள்ளை வன்புணர்வு , வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு , போன்றவை அடியோடு கைவிடப்படும் வரை , பாகிஸ்தான் என்ற நாட்டோடு கொள்ளும் உறவு , முதலை ,பாம்பு ,முதலியவற்றோடு கொள்ளும் நட்பு போன்றதே ..... திருத்தவியலாத மதம் மனிதர்கள் ,நாடு ....வேண்டாம் இவர்களது சங்காத்தம் .....900 ஆண்டுகளாக பட்டது போதும் ...இஸ்லாமிய உறவு வேண்டவே வேண்டாம் .....நம்பத்தகுந்த மதமோ , மக்களோ அல்ல அவர்கள் ...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-ஆக-202220:12:55 IST Report Abuse
Ramesh Sargam பாக்கிஸ்தான், நமது காஷ்மீர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும். இந்தியா-பாக்கிஸ்தான் இடையே உள்ள பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, சுமுகமான நட்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்தியாவைப்பொறுத்தவரை காஷ்மீர் ஒரு முடிந்து போன விஷயம். அதைப்பற்றி பேச பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும், அதிகாரமும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X