நொய்டா குடியிருப்பை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்து

Added : ஆக 19, 2022 | |
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது.உத்தர பிரதேசத்தில் இருக்கும் நொய்டா, புதுடில்லிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு, 'சூப்பர் டெக்' என்ற நிறுவனம் 40 மாடிகளை கொண்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது. ஆனால்,
நொய்டா குடியிருப்பை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்து

புதுடில்லி:உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் இருக்கும் நொய்டா, புதுடில்லிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு, 'சூப்பர் டெக்' என்ற நிறுவனம் 40 மாடிகளை கொண்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது. ஆனால், இது சட்டவிரோதமாக கட்டப்பட்டதால் அந்தக் கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'வரும் ஆக., 28க்குள் இடிக்க வேண்டும்; அப்போது ஏதாவது தடை ஏற்பட்டால் செப்.4க்குள் இரண்டு கட்டடங்களையும் இடித்து விட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கட்டடங்களை இடிக்கும் பணி 'எடிபைஸ் இன்ஜினியரிங்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நூறு ஊழியர்கள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கட்டத்தில் வெடிமருந்து வைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் கட்டடத்தை இடிக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X