கலப்பட பால் பறிமுதல்பரிசோதனை தீவிரம்

Added : ஆக 19, 2022 | |
Advertisement
பாலக்காடு:இங்கு, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட, 12 ஆயிரத்து 750 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில், பால்வள துறையின் சோதனை சாவடி உள்ளது. இங்கு, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட, 12 ஆயிரத்து 750 லிட்டர் பாலை பரிசோதித்ததில், கலப்பட பால் என்பது
கலப்பட பால் பறிமுதல்பரிசோதனை தீவிரம்

பாலக்காடு:இங்கு, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட, 12 ஆயிரத்து 750 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரள எல்லையான மீனாட்சிபுரத்தில், பால்வள துறையின் சோதனை சாவடி உள்ளது. இங்கு, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட, 12 ஆயிரத்து 750 லிட்டர் பாலை பரிசோதித்ததில், கலப்பட பால் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பால் டேங்கருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

பால்வளத்துறை அதிகாரி அபின் கூறியதாவது: முதற்கட்டப் பரிசோதனையில், பாலில் கொழுப்பு அல்லாத பொருட்களின் அளவு அதிகரிப்பதற்காக கலப்படம் செய்துள்ளனர். கூடுதல் பரிசோதனை மற்றும் தொடர் நடவடிக்கைகளுக்காக, உணவு பாதுகாப்பு துறையிடம் பால் டேங்கர் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பாலின் அளவு அதிகரிப்பதால், பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X