பாலியல் வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட்: சிக்குவாரா நித்தி| Dinamalar

பாலியல் வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட்: சிக்குவாரா நித்தி

Updated : ஆக 19, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (2) | |
பெங்களூரு: சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீதான 2010-ம் ஆண்டு பாலியல் வழக்கில், ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் ஜாமினில் வெளி வரமுடியாக கைதுவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நித்யானந்தா மீது அவருடைய முன்னாள் உதவியாளர் லெனின் கருப்பன் 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 2010ம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு ராம்நகர்
 Arrest Warrant Against Nithyananda In 2010 Rape Case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு: சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீதான 2010-ம் ஆண்டு பாலியல் வழக்கில், ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் ஜாமினில் வெளி வரமுடியாக கைதுவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.


பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நித்யானந்தா மீது அவருடைய முன்னாள் உதவியாளர் லெனின் கருப்பன் 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 2010ம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பி்னனர் ஜாமினில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து நித்யானந்தா விலக்கு பெற்றிருந்தார்.


latest tamil newsஇந்நிலையில், வழக்கு விசாரணைக்கு, நித்யானந்தா ஒத்துழைப்பு தரவில்லை; எனவே அவர் ஜாமினை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு குறித்த விசாரணையின் போது, 'நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என', கர்நாடக சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

இதனால், அவர் எங்கு உள்ளார் என்று கண்டறிந்து, அவரை கைது செய்து, ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 2019ல் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு நடந்த விசாரணையில் கர்நாடக உயர்நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்தது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவிற்கு ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக வரைபடத்தில் இல்லாத 'கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக கூறிக்கொண்டு அடிக்கடி வீடியோ வெளியிட்டுவருகிறார் நித்யானந்தா. இந்நிலையில் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளதால் கோர்ட் உத்தரவையடுத்து நித்தியை பிடிக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X