மச்சு பிச்சு... தென் அமெரிக்க சொர்க்கம் பெருவின் காணக் கிடைக்கா கோட்டை!

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தென் அமரிக்காவின் பழமையான சொர்க்க பூமியாகக் கருதப்படும் சுற்றுலாத் தலம் பெரு. இயற்கை எழில் சூழ்ந்த பெரு நாட்டில் ஆடம்பரமற்ற அமைதி வாழ்க்கை வாழும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்தியாவில் இருந்து பெரு சென்றுவர விமான கட்டணம் தவிர பெரும்பாலான செலவுகள் மிகக் குறைவு. பெரு நாட்டில் காணவேண்டிய ஐந்து முக்கிய சுற்றுலாத் தலங்கள் குறித்துப்
தென்னமெரிக்க சுற்றுலா, பெரு சுற்றுலா, peru tour, south america tour places

தென் அமரிக்காவின் பழமையான சொர்க்க பூமியாகக் கருதப்படும் சுற்றுலாத் தலம் பெரு. இயற்கை எழில் சூழ்ந்த பெரு நாட்டில் ஆடம்பரமற்ற அமைதி வாழ்க்கை வாழும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்தியாவில் இருந்து பெரு சென்றுவர விமான கட்டணம் தவிர பெரும்பாலான செலவுகள் மிகக் குறைவு. பெரு நாட்டில் காணவேண்டிய ஐந்து முக்கிய சுற்றுலாத் தலங்கள் குறித்துப் பார்ப்போம்.

மச்சு பிச்சு


latest tamil newsபெரு நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் மச்சு பிச்சு. உரிபாம்பா நதியை ஒட்டிய ஆண்டஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள சரித்திரப் புகழ்வாய்ந்த மலையடுக்கில் மலை ஏற சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மச்சு பிச்சு கோட்டை இந்த மலையுச்சியில் கம்பீரமாகக் காட்சியளிக்கும். இங்குள்ள சந்திரன் கோவில் மிகவும் புகழ்பெற்றது.

லைமா


latest tamil news


Advertisement


பெரு நாட்டின் தலைநகர் லைமாவில் பழங்கால கட்டடங்கள், அருங்காட்சியகங்கள், பார்கள், ரெஸ்டாரெண்டுகள் உள்ளன. இரவு பார்ட்டிக்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்நகரில் உள்ளன. பசிபிக் கடற்கரையை ஒட்டிய இந்த நகரில் 16ம் நூற்றாண்டு தேவாலயங்கள் பல உள்ளன.

மராஸ்


latest tamil newsபல ஆண்டுகாலமாக உப்பளங்கள் மூலம் உப்பு தயாரிக்கும் பகுதியாக விளங்குவது மராஸ். இன்காஸ் புனித பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இப்பகுதியில் வெள்ளை உப்பளங்களைப் புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர்.

கார்டிலெரா


latest tamil newsஆண்டெஸ் மலைத்தொடரின் தொடர்ச்சிதான் கார்டிலெரா மலைத்தொடர். 200 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்டிருக்கும் இந்த மலை 6 ஆயிரம் அடி உயரம் கொண்டது. 722 கிளேசியர் பனிப்படலத்தை கொண்ட மலை இது. இங்கு மலை ஏறுதல் முக்கியப் பொழுதுபோக்காகும்.

பிசாக்


latest tamil newsதெற்கு பெருவில் உள்ள அமைதியான கிராமம் பிசாக். இங்கு பழங்கால கோவில்கள் பல உள்ளன. மிகப்பெரிய அகழாய்வுத் தலமாகவும் விளங்கும் இடம். இங்குள்ள சந்தையில் கைவினைப் பொருட்களை ஷாப்பிங் செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
20-ஆக-202211:25:05 IST Report Abuse
Mahesh அடுத்த இலக்கு
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஆக-202211:18:13 IST Report Abuse
Natarajan Ramanathan தென் அமெரிக்காவில் உள்ள 6000+ KM நீளம் உள்ள ஆண்டஸ் மலைத்தொடர்தான் உலகின் மிகநீண்ட மலைத்தொடர்.
Rate this:
Cancel
Rajan Iyer - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-202211:00:05 IST Report Abuse
Rajan Iyer அடிப்பொலி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X