மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஆறு மாதத்தில் பணி துவக்கம் :அமைச்சர் தகவல்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவதற்கான புதிய திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடியாக உயர்ந்துள்ளது, ஆறு மாதங்களில் பணிகள் துவங்கும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.8.80 கோடியில் 28 மருத்துவ கட்டடங்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் நடந்த விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அவர் கூறியது:மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஆறு மாதத்தில் பணி துவக்கம் :அமைச்சர் தகவல்

ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவதற்கான புதிய திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடியாக உயர்ந்துள்ளது, ஆறு மாதங்களில் பணிகள் துவங்கும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.8.80 கோடியில் 28 மருத்துவ கட்டடங்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் நடந்த விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அவர் கூறியது:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1264 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு சுற்றுச் சுவர் கட்டப்பட்டதுடன் நிறுத்தப்பட்டது.

தற்போது புதிய திட்ட மதிப்பீடு 1977 கோடியே 80 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மருத்துவ மனைக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.ஜப்பான் நாட்டின் 'ஜைகா' நிறுவனம் 82 சதவீதம் நிதியுதவியாக ரூ.1627 கோடியும், மீதம் 18 சதவீதம் மத்திய அரசின் நிதியும் வழங்கப்படுகிறது. வரைபடம் தயாரித்து ஜைகா நிறுவன ஒப்புதல் பெறப்பட்டதும் ஆறு மாதங்களில் பணிகள் துவங்கும்.

பார்த்திபனூரில் ரூ.1 கோடியில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி விரைவில் துவங்கப்படும். மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்களில் மருத்துவ கட்டமைப்பு தரம் மேம்படுத்தப்படும். வட மாநில சுற்றுலாப் பயணிகள் வரும் ராமேஸ்வரத்தில் உயர் மருத்துவ சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்னுயிர் காப்போம்' திட்டத்தில், சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சத்து 5,576 பேருக்கு ரூ.94.69 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
20-ஆக-202203:11:45 IST Report Abuse
John Miller அண்ணாமலை இதெற்கு என்ன பதில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X