தேனி மருத்துவக் கல்லூரியில் 18 ஆண்டுகளாககூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தொடரும் சிக்கல்:அனுமதி அளிக்குமா இந்திய மருத்துவ கவுன்சில்| Dinamalar

தேனி மருத்துவக் கல்லூரியில் 18 ஆண்டுகளாககூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தொடரும் சிக்கல்:அனுமதி அளிக்குமா இந்திய மருத்துவ கவுன்சில்

Added : ஆக 19, 2022 | |
தேனி:இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துவதால் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் 18 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க 2002ல் ஆக., 16ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2004 டிச., 8 ல்
தேனி மருத்துவக் கல்லூரியில் 18 ஆண்டுகளாககூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தொடரும் சிக்கல்:அனுமதி அளிக்குமா இந்திய மருத்துவ கவுன்சில்

தேனி:இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துவதால் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் 18 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க 2002ல் ஆக., 16ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2004 டிச., 8 ல் துவக்கப்பட்டது.100 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது.

96 பேராசிரியர்களுடன் உடற்கூறியல், உடலியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், நோயியல், மருந்தியல், தடயவியல் மருத்துவம், சமூக - நோய் தடுப்பு மருத்துவத்துறை உட்பட எட்டுத்துறைகளுடன் இயங்குகிறது. இதுதவிர மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம், கதிரியக்கவியல், அவசர கால விபத்து சிகிச்சை என 20 பிரிவுகள் உள்ளன.

கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்க வகுப்பறைகள், ஆய்வகங்கங்கள், மருத்துவ பேராசிரியர்களை நியமித்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனுமதி கோரி 2022 ஜனவரியில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் அதற்கான ஒப்புதல் 8 மாதங்களாகியும் இன்னும் கிடைக்க வில்லை.

தேனிக்கு பின் பிற மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் 150 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தேனியில் மட்டும் 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.


நடவடிக்கை இல்லை


2016ல் கல்லுாரியில் திடீர் ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் வரிசையாக நிற்க வைத்து வீடியோ எடுத்து காலிப் பணியிடங்களை கணக்கெடுத்து சென்றனர். ஆனால் இதுவரை காலிப்பணியிடங்களை நிரப்ப வில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கிறது.கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவும்,பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X