வசிஷ்ட நதி அணைகள் விவகாரம் அரசுக்கு தீர்ப்பாயம் 3 மாதம் கெடு

Added : ஆக 19, 2022 | |
Advertisement
சென்னை:வசிஷ்ட நிதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் விவகாரத்தில், நிபுணர் குழு பணிகளை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால், தங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26

சென்னை:வசிஷ்ட நிதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் விவகாரத்தில், நிபுணர் குழு பணிகளை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால், தங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 26 விவசாயிகள், 2016-ல், பசுமை தீர்ப்பாயத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், 'அறிவியல் முறையிலான தீர்வுகளை பரிந்துரைக்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.'மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞானி, மத்திய நீர் ஆணையத்தின் விஞ்ஞானி, அண்ணா பல்கலை நீர்வள மைய இயக்குனர் ஆகியோர் அடங்கிய, நிபுணர் குழு தன் அறிக்கையை, ஆறு மாதங்களுக்குள் அரசிடம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், நீதித் துறை உறுப்பினர்கள் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நீதிபதி அருண்குமார் தியாகி, நிபுணர் குழு உறுப்பினர்கள் சத்யகோபால், செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவு:தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு உறுப்பினர் நியமிக்கப்படவில்லை' என்றார்.

தீர்ப்பாயம் உத்தரவிட்டு, ஆறு மாதங்கள் கடந்து விட்டன. நிபுணர் குழுவை ஒரு மாதத்திற்குள் அமைக்கவும், மூன்று மாதங்களுக்குள் குழுவின் பணிகளை முடிக்கவும், தலைமை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில், தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X