37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்

Added : ஆக 19, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
அடிஸ் அபாபா, சூடானில், 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் விமானிகள் துாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வட ஆப்பிரிக்க நாடான சூடானின் கார்ட்டூமில் நகரில் இருந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சமீபத்தில் போயிங் 737 ரக விமானம் சென்றது.அது அடிஸ் அபாபாவை நெருங்கிய போது விமான நிலைய அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள்
37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்

அடிஸ் அபாபா, சூடானில், 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் விமானிகள் துாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வட ஆப்பிரிக்க நாடான சூடானின் கார்ட்டூமில் நகரில் இருந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சமீபத்தில் போயிங் 737 ரக விமானம் சென்றது.அது அடிஸ் அபாபாவை நெருங்கிய போது விமான நிலைய அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை.



விமானம் தரையிறங்க வேண்டிய நேரம் நெருங்கியும் விமானிகளிடமிருந்து பதிலில்லை. இதையடுத்து, அவசரகால அபாய எச்சரிக்கையை விமான நிலைய அதிகாரிகள் அனுப்பினர்.
அப்போதுதான், ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த விமானிகள் இருவரும் கண்விழித்தது தெரிய வந்ததது.அதுவரையிலும் தானியங்கி முறையில் இயங்கிய விமானம், அதன் பிறகு விமானிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து விமானம் 25 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது. இதில் பயணியர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.அதிக வேலைப்பளு காரணமாக, விமானிகள் சோர்வில் இருந்ததால் துாங்கியதாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vigneshh - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஆக-202213:26:30 IST Report Abuse
vigneshh நம்ம CM போல தூங்கிட்டாங்க சார் விடுங்க. ஒரு அரசாங்கமே தூங்குது அப்புறம் என்ன ரெண்டு விமானிகள்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
20-ஆக-202211:16:20 IST Report Abuse
jayvee இரண்டு விமானிகளும் ஒரே சமயத்தில் தூங்குவது என்பது மிக பெரிய கிரிமினல் குற்றம்..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-ஆக-202205:24:51 IST Report Abuse
NicoleThomson பாவம் அந்த விமானிகள்
Rate this:
20-ஆக-202209:07:46 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்ஹாஹாஹா .... தூக்கம் கெட்டுப்போச்சேன்னு கவலைப்படறீங்க போலிருக்கு ...... டேக் ஆப், லேண்டிங் சமயத்திலாவது விமானிகள் கண்ட்ரோலுக்கு விமானம் வரணுமாம் ...... மற்றபடி தானியங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கலாமாம் ..... அதனால் பயமில்லை .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X