நண்பனே... எனது உயிர் நண்பனே!

Added : ஆக 20, 2022 | |
Advertisement
கோவை சட்டக் கல்லூரியில் 1994 முதல் 2004ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.ஜென்னீஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியை, அரசு வழக்கறிஞர் ஹேமா மற்றும் வழக்கறிஞர் சங்கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.புதிதாக ஒரு டிரஸ்ட் துவக்கப்பட்டு, அதில் தங்களுடன் படித்த மாணவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து
நண்பனே... எனது உயிர் நண்பனே!

கோவை சட்டக் கல்லூரியில் 1994 முதல் 2004ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஜென்னீஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியை, அரசு வழக்கறிஞர் ஹேமா மற்றும் வழக்கறிஞர் சங்கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.புதிதாக ஒரு டிரஸ்ட் துவக்கப்பட்டு, அதில் தங்களுடன் படித்த மாணவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.தாங்கள் படித்த சட்டக் கல்லூரியில், மரக்கன்று நடுவது மற்றும் ஆடிட்டோரியம் பராமரிப்பு பணி மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக, தங்களுடன் படித்து, சமீபத்தில் இறந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மொத்தம் 64 மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்ற இந்த நிகழ்வில், அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அடுத்ததாக, 2024ம் ஆண்டு விழாவில், 20 ஆண்டுகால நிறைவை சிறப்பிக்கும் வகையில் தங்கள் கல்லூரி முன்னாள் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை கவுரவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழாவை, வழக்கறிஞர் சற்குரு மற்றும் குணசேகர் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X