1.35 கோடி பெண்களுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்!':

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 1.35 கோடி பெண்களுக்கு இலவசமாக, 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தாண்டு துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ்
1.35 கோடி பெண்களுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்!'

ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 1.35 கோடி பெண்களுக்கு இலவசமாக, 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தாண்டு துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள, 1.35 கோடி பெண்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், இந்த திட்டத்துக்கான 'டெண்டர்' பணி துவங்கியுள்ளது. இது குறித்து இத்திட்டத்தின் அதிகாரி சத்ரபால் சிங் கூறியதாவது:தொலைதொடர்பு சேவை வழங்கும் மூன்று நிறுவனங்கள் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளன. இதற்காக, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும்.
மொபைல் போனுடன், மூன்று ஆண்டுகளுக்கான 'இன்டர்நெட்' சேவை உள்ளிட்ட மற்ற வசதிகளும் இலவசமாக தரப்படும். அனைத்து நடைமுறைகளும் விரைவில் முடிந்து விடும். பண்டிகை காலம் துவங்குவதற்குள் போன்களை வினியோகிக்கும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். 'அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், வாக்காளர்களை கவர்வதற்காக இந்த மொபைல் போன் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துகிறது' என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-202209:39:06 IST Report Abuse
அப்புசாமி இது இலவசமல்ல. சமூக நலத் திட்டம். கிராமப்புற பெண்களும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பங்குகொள்ள வாணாமா?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-ஆக-202205:17:32 IST Report Abuse
NicoleThomson சுத்தம் இந்த இலவசம் தான் கிராமங்களை கூட சோம்பேறியாக்குகிறது
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-ஆக-202202:35:43 IST Report Abuse
Fastrack ஆதார் நம்பர் மூலம் எத்தனை பேரிடம் ஏற்கனவே மொபைல் போன் இருக்கிறது என்று தெரிந்து விடுமே ..கொடுக்குகிறதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா IPhone தரலாமே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X