தனியாரிடம் மின்சாரம் வாங்க தமிழகத்திற்கு தடை : இருளில் மூழ்கும் அபாயம்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை:மின்சாரம் கொள்முதல் செய்ததற்கு 926 கோடி ரூபாய் நிலுவை தொகை தராததால் மின்சார சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் தமிழக மின் வாரியத்திற்கு மத்திய மின் துறையின் 'பொசோகோ' நிறுவனம் தடை விதித்து உள்ளது.தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது. அதை பூர்த்தி செய்ய மின் வாரியத்தின் சொந்த நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம்
தனியார்  மின்சாரம்  தமிழகத்ம் ,தடை : இருள் ,ல் மூழ்கும் அபாயம்

சென்னை:மின்சாரம் கொள்முதல் செய்ததற்கு 926 கோடி ரூபாய் நிலுவை தொகை தராததால் மின்சார சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் தமிழக மின் வாரியத்திற்கு மத்திய மின் துறையின் 'பொசோகோ' நிறுவனம் தடை விதித்து உள்ளது.

தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்கள் என்றளவில் உள்ளது. அதை பூர்த்தி செய்ய மின் வாரியத்தின் சொந்த நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால் மத்திய அரசின் மின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் குறுகிய நடுத்தர நீண்ட கால அடிப்படையில் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டு மின்சாரம் வாங்கப்படுகிறது.


latest tamil news



ரூ.926 கோடி



இது தவிர காலை மாலையில் ஏற்படும் உச்ச நேர மின் தேவையை சமாளிக்க 'இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்' போன்ற உடனடி மின்சார சந்தையில் இருந்து தினமும் சராசரியாக 1 கோடி - 1.50 கோடி யூனிட்கள் மின்சாரம் வாங்கப்படுகிறது. அந்த மின்சாரத்தின் விலை தேவையை பொறுத்து ஒரு யூனிட் 5 - 10 ரூபாய்க்கு மேல்
உள்ளது.மின்சார சந்தையில் மின்சாரம் வாங்குவதற்கு குறித்த காலத்தில் மின் வாரியம் பணம் வழங்குவதில்லை. இதுவரை 926 கோடி ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளது. இதேபோல் பல மாநிலங்களும் நிலுவை வைத்துஉள்ளன.
இதையடுத்து தமிழக மின் வாரியம் ஆந்திரா, தெலுங்கானா, மணிப்பூர், மிசோரம், கர்நாடகா, பீஹார், ராஜஸ்தான்,ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், ம.பி.,மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் மின்சார சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் அதை கண்காணிக்கும் பொசோகோ எனப்படும் 'பவர் சிஸ்டம் ஆப்பரேஷன் கார்ப்பரேஷன்'
நிறுவனம் தடை விதித்துள்ளது.இதனால் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.

இதனால் தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது.தமிழக மின் வாரியம் மட்டும் பல நிறுவனங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தர வேண்டியுள்ளது.அந்த தொகைக்கான வட்டி மட்டும் பல நுாறு கோடி ரூபாயை தாண்டும். மின் சப்ளை நிறுவனங்களுக்கு நிலுவை தொகை வழங்குவதில் மாநில மின் வாரியங்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு ஜூனில் அறிவித்தது. அதன்கீழ் நடப்பாண்டு ஜூன் நிலவரப்படி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வழங்க வேண்டிய நிலுவை மற்றும் அதற்கான வட்டி சேர்த்து
மொத்தமாக கணக்கிடப்படும்.அந்த மொத்த தொகை 48 மாதங்களில் தவணையாக செலுத்த வேண்டும். இதனால் தாமதமாக வழங்குவதற்காக அதிகரிக்கும் வட்டிச் சுமை குறையும். இத்திட்டத்தில் இணைய தமிழக மின் வாரியம் 800 நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தது.


வெறும் ரூ.70 கோடி தான்



இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் தேவை வழக்கத்தை விட மிகவும் அதிகரிக்கும் பட்சத்தில் தான் மின்சார சந்தையில் வாங்கப்படுகிறது. தற்போது
சீசன் என்பதால் காற்றாலைகளில் இருந்து தினமும் அதிக மின்சாரம் கிடைக்கிறது. எனவே, செப்., வரை மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மின்சார சந்தைக்கு 70 கோடி ரூபாய் மட்டுமே நிலுவை தொகை உள்ளது. அந்த தொகையும் சனிக்கிழமை வழங்கப்படும்.மின் தேவை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில் காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைப்பதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களில், மீண்டும் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
எனவே, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, தமிழகத்தில் மின்சாரம் கிடைப்பதால் தடையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
21-ஆக-202207:07:24 IST Report Abuse
Dharmavaan கையாலாகாத ஊழல் அரசு எல்லாம் ஞான சூன்யம் ஒன்றும் தெரியாது திருடுவதை தவிர.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஆக-202208:23:54 IST Report Abuse
Lion Drsekar நேற்றைய செய்தி இனி பவார் சுட் என்பதே இருக்காது, இன்று இருளில் மூழ்கும், இதில் எது உண்மை. நேற்றைய செய்திக்கு ஆதாரம் மின்சார கட்டிடம், இன்றைய செய்திக்கு ஆதாரம் ஏதோ ஒரு பெயரே வைக்கப்படாத ஒரு அதிகாரி . இதையெல்லாம் ஒரு செய்தியாக பிரசுரிக்க ஒரு அரசு. வந்தே மாதரம்
Rate this:
Cancel
gopal - chennai,இந்தியா
20-ஆக-202208:16:24 IST Report Abuse
gopal 'தமிழகத்தை இருட்டில் மூழ்க அடித்துவிட்டு மெரினாவில் பேணா சிலை வைப்போம். என்ன செய்வாய் ?' என்று காதில் கேட்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X