காரைக்கால் : சிமெண்ட் கடை காசாளர் வீட்டின் பூட்டை உடைந்து தங்க நகையை திருட்டு சென்ற ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர்.காரைக்கால், திருப்பட்டினம் நிரவி ரோஜா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி; நாகை மாவட்டத்தில் சிமெண்ட் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார்.உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினருடன் கடந்த 14ம் தேதி புதுச்சேரிக்கு சென்றார்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட் டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து, நிரவி சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.