புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் கடந்த 18ம் தேதி, 364 பேர் கொரோனா தொற்றால் பாதித்திருந்தனர். அவர்களில் 89 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் 755 பேருக்கு பரிசோதனை செய்ததில், 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலத்தில் தற்போது 326 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில், புதுச்சேரியில் 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், புதுச்சேரியில் 252, காரைக்காலில் 54, ஏனாமில் 11 என மொத்தம் 317 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று சத்வீதம் 6.75 ஆக உள்ளது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 7,438 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.