சீனாவின் 'இந்திய பெருங்கடல் மிஷன்' : இந்தியாவுக்கு ஆபத்தாக அமையலாம்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி :'மிஷன் இந்தியன் ஓஷன்' என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் தன் பலத்தை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சி, இந்தியாவுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக அமையலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ளது. ஏற்கனவே பல நாடுகளை கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது; நம் நாட்டில் சில பகுதிகளுக்கும் உரிமை கோரி
சீனா இந்திய பெருங்கடல் மிஷன்' : இந்தியா


புதுடில்லி :'மிஷன் இந்தியன் ஓஷன்' என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் தன் பலத்தை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சி, இந்தியாவுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக அமையலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ளது. ஏற்கனவே பல நாடுகளை கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது; நம் நாட்டில் சில பகுதிகளுக்கும் உரிமை கோரி வருகிறது.


latest tamil news
இந்நிலையில், உலகின் வல்லரசாக மாறுவதற்கான முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அந்நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தன் அண்டை நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி கடன் அளித்து, அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.

இந்நிலையில், ஆப்ரிக்க நாடான டிஜிபோட்டியில், 47 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட துறைமுகத்தை சீனா அமைத்துள்ளது. கடந்த 2016ல் துவங்கிய இந்தப் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக, செயற்கைக்கோள் படங்கள் ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன.இது குறித்து, நம் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:டிஜிபோட்டி துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது, செங்கடல் மற்றும் ஆடன் வளைகுடாவுக்கு இடையில் உள்ளது.
மேலும், உலகிலேயே அதிக வர்த்தகம் நடக்கும் சூயஸ் கால்வாய் செல்லும் வழியில் இது அமைந்துள்ளது.டிஜிபோட்டியில் இருந்து இந்தியப் பெருங்கடலை கண்காணிக்க முடியும். தற்போது டிஜிபோட்டி துறைமுகத்தில், சீனாவின் பிரமாண்ட போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சில போர்க் கப்பல்களையும் அங்கு நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.நம் மற்றொரு அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டாவில், சீனாவின் உளவுக் கப்பலான 'யுவான் வாங் - 5' ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஜிபோட்டியில் சீனாவின் போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை சாதாரணமாக பார்க்கக் கூடாது.
இலங்கை அரசைப் போல டிஜிபோட்டி அரசும், சீனாவின் கடனை அடைக்க முடியாமல், அதனிடம் சரணடைந்துள்ளது. இந்த இரண்டு துறைமுகங்களைத் தவிர, பாகிஸ்தானின் கவாடர் துறைமுகத்தையும் சீனா எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.இந்தியப் பெருங்கடலின் பல இடங்களில், அமெரிக்கா தன் போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. சீனாவின் இந்த முயற்சி, அமெரிக்காவுக்கு சவால் விடுக்க மேற்கொள்ளப்பட்டதாக கருத முடியாது. எதிர்காலத்தில், இந்தியப் பெருங்கடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சீனாவின் முக்கிய நோக்கமாக இருக்கும். அவ்வாறு நடந்தால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதையடுத்து இந்யா எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
20-ஆக-202208:23:10 IST Report Abuse
R Ravikumar இந்தியாவால் நிச்சயம் இதனை சமாளிக்க முடியும் . பிரச்னை என்ன வென்றால் ,கடல் சார் பாதுகாப்பு செலவு அதிகம் செய்ய வேண்டி இருக்கும்.அதற்கான வரி நம் தலை மேல் விழும் . சீனனை ஆதரிக்கும் இங்கு உள்ள துரோகிகள் பற்றி மக்கள் உற்று கவனிக்க வேண்டும் . இன்னொரு விஷயம் இருக்கிறது .. சீனன் 5000 km வரை சென்று தாக்கும் ( torpedos என்று நினைக்கிறேன் ) ஆயுதம் வைத்து இருக்கிறன் . ஆனால் நமது இந்தியா அது போன்று தயாரிக்கும் பலம் இருந்தாலும் , வல்லரசு போட்டியில் இன்னும் இறங்காததால் அதனை தயாரிக்காமல் வைத்து இருக்கிறது . இது போன்ற ஆயுதங்கள் இந்தியாவும் தயாரிக்க முற்படும் . வியட்நாம் கடற்கரையில் இருந்து சீனாவை தாக்க முடியும் , அருகே செல்ல வேண்டிய அவசியம் யில்லை . நாளை போர் என்று ஏதும் வந்தால் .. சீனனுக்கு தென் சீன கடலை தாண்டி வந்து இந்தியா பெருங்கடலில் நுழைந்து தாக்க வேண்டி வரும் , அது அவர்களுக்கு சிரமம் . மேலும் இந்தியா .. எந்த வியாபார / உளவு / ராணுவ கப்பல் வந்தால் கூட யோசிக்காமல் தாக்கும் பூவியில் அனுகூலம் இருக்கிறது . அதற்கு பயந்து தான் சீனன் சுற்றி வளைக்கிறான் நமது கடலை . என்ன காரணம் ? போர் வரும் என்று சீனன் எதிர்பார்க்கிறான் , மேலும் ராணுவ ரீதியாக அமெரிக்கா பெரிய சவாலாக இருந்தாலும் , சீனனுக்கு பொருளாதார போட்டி இந்தியா என்று அவன் நினைக்கிறான் . நாம் அமெரிக்கா ஆயுத கப்பலை நாம் அனுமதிப்போம் .. அதில் உள்ள பிரச்னை நாம் நமது தனித்துவத்தை இழப்போம் . அமெரிக்காவின் பிடி அதிகம் ஆகும் . ரஷ்யா சற்றே நம்மை விட்டு விலகும் . இறைஅருள் காக்கட்டும் .
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-ஆக-202208:03:33 IST Report Abuse
Barakat Ali ....
Rate this:
Cancel
20-ஆக-202207:10:05 IST Report Abuse
ராஜா சீனாவும் வட கொரியா போன்ற நாடு தான் என்ற உண்மை தெரியாமல் அவர்களை வளர்த்துவிட்டு இன்று வேடிக்கை பார்கிறது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். சீனா ஐந்து துண்டுகளாக உடைய வேண்டும். அது தான் இயற்கையின் நியதி. அது விரைவில் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X