சிவகுமாருக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்தால் முழு ஆதரவு அளிப்பதாக குமாரசாமி அதிரடி

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சித்ரதுர்கா : ''கடவுள் ஆசியால், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால், நான் முதல்வர் ஆகும் ஆசையை விட்டு விடுகிறேன். அவருக்கு முழு ஆதரவு தருகிறேன்,'' என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்., தலைவர் சிவகுமார்
Congress, Shivakumar, Kumaraswamy, Karnataka

சித்ரதுர்கா : ''கடவுள் ஆசியால், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால், நான் முதல்வர் ஆகும் ஆசையை விட்டு விடுகிறேன். அவருக்கு முழு ஆதரவு தருகிறேன்,'' என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.

கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்., தலைவர் சிவகுமார் ஆகியோர் தங்களை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி கொள்ள பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் நடந்த ஒக்கலிகர் மாநாட்டில், முதல்வர் ஆவதற்கு தனக்கு ஆதரவளியுங்கள் என சிவகுமார் கேட்டு கொண்டார். மற்றொரு புறம், தாவணகரேவில் கடந்த 3ம் தேதி சித்தராமையா பிரமாண்டமான அளவில் பிறந்த நாள் கொண்டாடினார்.


latest tamil news



இதற்கிடையில், சித்ரதுர்காவின் ஹிரியூரில் நேற்று நடந்த ஒக்கலிகர் மாநாட்டில் சிவகுமார் பேசுகையில், ''சூரியன் கதிர்கள் ஜன்னல், கதவு வழியாக லட்சுமி வீட்டிற்கு வரும் நேரம் வந்துள்ளது. ஒக்கலிகர் சமுதாயம் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இது குறித்து, சமூகத்தின் இரண்டு மடாதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இதே மாநாட்டில் ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று பேசியதாவது: மைசூரில் நடந்த ஒக்கலிகர் மாநாட்டில், முதல்வர் ஆகும் விஷயத்தை சிவகுமார் வெளிப்படுத்தினார். ஆனால், அவரது கட்சிக்காரர்களே இடையூறு செய்கின்றனர். கடவுள் ஆசியால், அவர் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால், நான் முதல்வர் ஆகும் ஆசையை விட்டு விடுகிறேன். அவருக்கு முழு ஆதரவு தருகிறேன்.

முதல்வர் ஆவதற்கு காங்கிரசில் அவர் தீவிரமாக முயற்சி செய்யட்டும். என் கட்சியில் நான் போராடுகிறேன். மக்கள் ஆசிர்வாதம் யாருக்கு இருக்கிறதோ, தெரியாது.காங்கிரசில் சிவகுமார் சந்திக்கும் கஷ்டங்கள் அவருக்கு தான் தெரியும். எனக்கு சில விஷயங்கள் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.குமாரசாமியின் திடீர் அறிவிப்பு, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

இரு தரப்பினர் வாக்குவாதம்

ஒக்கலிகர் மாநாட்டுக்கு குமாரசாமி வந்த போது, அவரது ஆதரவாளர்களும்; சிவகுமார் வந்த போது அவரது ஆதரவாளர்களும் தனித் தனியாக கோஷம் எழுப்பினர். கோஷம் போடுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மடாதிபதிகள் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-202215:54:14 IST Report Abuse
ஆரூர் ரங் இன்னும் குட்டி ராதிகாவுக்காவது உங்கள் ஆதரவு தொடர்கிறதா? ஏனெனில் 🙃 காலை வாரி விடும் குணம் உங்களுடையது.
Rate this:
Cancel
20-ஆக-202205:13:21 IST Report Abuse
சந்திரசேகர் குமாரசாமி, நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே சேர்ந்து ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் எப்படி இருக்கும் ஒரு கற்பனை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-ஆக-202204:30:56 IST Report Abuse
NicoleThomson இப்படி பிரிந்து நிற்பது தான் சித்தராமையாவிற்கு சாதகம் ஆகிறது . உண்மையில் சிவகுமாரினால் ரியல் எஸ்டேட் குண்டர்கள் அதிகரித்து விட்டனர் அது தான் அவருக்கு அவரது சமூகத்திலேயே பின்னடைவை ஏற்படுத்துகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X