மத்திய அரசு முடிவுக்கு செந்தில் பாலாஜி எதிர்ப்பு

Added : ஆக 20, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை : 'மத்திய அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது; இந்நிலையில், தன்னிச்சையாக மின்சாரம் வழங்குவதை நிறுத்தியிருப்பது ஏற்புடையதல்ல' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: மத்திய அரசின் எரிசக்தித் துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவை தொகை, 361 கோடி ரூபாய், இம்மாதம் 4ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது.மத்திய அரசின்
DMK, Senthil Balaji, Electricity Minister,மத்திய அரசு, மின் துறை அமைச்சர், செந்தில்பாலாஜி

சென்னை : 'மத்திய அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது; இந்நிலையில், தன்னிச்சையாக மின்சாரம் வழங்குவதை நிறுத்தியிருப்பது ஏற்புடையதல்ல' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: மத்திய அரசின் எரிசக்தித் துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவை தொகை, 361 கோடி ரூபாய், இம்மாதம் 4ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது.மத்திய அரசின் இணையதளத்தில் மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத் தொகையை வெளியிட முடியும்; ஆனால், தமிழக மின் வாரியம் பதில் அளிக்கும் வழிவகை இல்லை.


latest tamil news



நிறுவனங்கள் குறிப்பிடும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால், அதை நிறுவனங்கள் பெற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை. சர்ச்சைக்குரிய பட்டியலுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பும், அவகாசமும் இல்லாமல், தன்னிச்சையக மின் வழங்கலை நிறுத்துவது ஏற்புடையதில்லை.

சில காற்றாலை மற்றும் சூர்ய சக்தி நிறுவனங்களுக்கு மட்டும் குறைவான தொகை நிலுவையில் உள்ளது. அதுவும் ஓரிரு நாட்களில் வழங்கப்பட்டு விடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
20-ஆக-202211:25:29 IST Report Abuse
jayvee மக்களுக்கு தவறான செய்திகளை கொடுத்து அவர்களை குழப்பி விடுவதில் இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர். ஒருவர் மின்சாரம் மற்றோருவர் நிதித்துறை. இவர்களின் அறிக்கைகளை முதல்வரின் தனிச்செயலர் ஒப்புதல் கொடுத்தபின்தான் பத்திரிக்கைகளுக்கு கொடுக்க வழி வகை செய்ய வேண்டும். மேலும் இவர்கள் இருவரும், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவதை முதல்வர் நிறுத்தி ஆணையிட வேண்டும். இவர்கள் இருவரும் திமுகவிற்கு அவப்பெயர்களை சம்பாதித்து கொடுக்கின்றனர்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-ஆக-202209:55:19 IST Report Abuse
கல்யாணராமன் சு. செந்தில் பாலாஜி தன்னுடைய பக்க நியாயத்தை நிரூபிக்க ஒரே வழி: மொத்த கடன் தொகை எவ்வளவு, அதில் பழைய நிலுவை தொகை எவ்வளவு ? இப்போதைய நிலுவை தொகை எவ்வளவு ? எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது ? எப்போது கொடுக்கப்பட்டுள்ளது ? யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது ? மீதம் உள்ள நிலுவை தொகை எவ்வளவு ? என்று எல்லாவற்றையும் ஒரு அறிக்கையாக வெளியிட்டுவிட்டால் பிரச்சினையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
Rate this:
Cancel
20-ஆக-202209:51:07 IST Report Abuse
ராமகிருஷ்ணன் மின்வெட்டு ஆற்காட்டாரின் வாரிசு மின்வெட்டு, சுருட்டு அணில் பாலாஜியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X