தி.மு.க.,வின் ஜாதிய வன்மம்: அண்ணாமலை கண்டனம்

Added : ஆக 20, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை: 'திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், தாசில்தார் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது, தி.மு.க., அரசின் ஜாதிய வன்மத்தின் உச்சம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில், தாசில்தார் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது, தி.மு.க., அரசின் ஜாதிய வன்மத்தின் உச்சம். அவர் பட்டியல் இனத்தை
BJP, Annamalai, DMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், தாசில்தார் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது, தி.மு.க., அரசின் ஜாதிய வன்மத்தின் உச்சம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில், தாசில்தார் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது, தி.மு.க., அரசின் ஜாதிய வன்மத்தின் உச்சம். அவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் இருக்கை வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.

அந்த விழாவில் துணை தாசில்தார், எம்.எல்.ஏ., மட்டுமின்றி, அங்கு வந்திருந்த தி.மு.க.,வினருக்கு கூட இருக்கை வழங்கப்பட்டது. ஆனால், அரசு அதிகாரி ஒருவருக்கு இருக்கை வழங்கப்படவில்லை. சமூகநீதி, சமத்துவம் என, போகும் இடம் எல்லாம் தம்பட்டம் அடிக்கும் தி.மு.க.,வின் முகத்திரைக்கு பின்னால் இருக்கும் ஜாதிய கோட்பாட்டை, இந்த நிகழ்வும் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இதற்கு முதல்வரின் பதில் என்ன? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
அண்ணாமலையின் மற்றொரு அறிக்கை:கடந்த, 20 ஆண்டுகளுக்கு பின், தங்கள் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்படுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தரமற்ற சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில், தமிழகத்திற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில், 2,269 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தரமற்ற சாலைகளை போட்டு, ஊழலில் கொழிக்கும் தி.மு.க., அரசு, மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை, தமிழக பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohan - San Jose,யூ.எஸ்.ஏ
20-ஆக-202216:56:07 IST Report Abuse
Rohan இதே தி மு க தானே ஜாதி வெருபாட்டிற்கு காரணம் பார்ப்பனர்கள் என்று சொல்லி 80 வருடங்களாக எல்லோரையும் ஏமாற்றி வந்தது. உண்மையான காரணம் என்னவென்றால் பிராமணர்கள் பதவியில் இருந்தால் இவர்கள் செய்யும் ஊழலுக்கு துணை போக மாட்டார்கள் என்பதுதான்
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
20-ஆக-202213:57:09 IST Report Abuse
Ramamurthy N திரு அண்ணாமலை எப்போதும் கூறும் ஒரே டயலாக், தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரி எவ்வளவு? அதிலிருந்து ஏதோகொஞ்சம் திரும்ப கொடுத்து விட்டு என்னமோ தன்னுடைய சொந்த பணத்தை வாரிகொடுப்பது போல சீன் போடவேண்டாம். இது அனைத்தும் மக்கள் அளிக்கும் நிதி தான். இதில் ஊழல் நடைபெற்றால் அதனை ஆதாரத்துடன் தெரிவித்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். நானும் இருக்கேன் என்பதற்காக தினமும் ஒரு அறிக்கை. இனியாவது ஆராய்ந்து உண்மை செய்தியை மட்டும் கூறலாமே?
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
20-ஆக-202210:03:38 IST Report Abuse
ThiaguK இருக்க போவது எவ்வளவு நாளோ கொள்ளை அடித்து எல்லா நாட்டிலும் போட்டுடா பல தள முறைகள் உல்லாசாம வாழலாம் மக்கள் ஏமாளிகளாவே வாழலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X