சாலைகளில் கட்டுமான பொருட்கள் அகற்ற மாநகராட்சி கெடு விதிப்பு

Added : ஆக 20, 2022 | |
Advertisement
பெங்களூரு-'பெங்களூரின் சாலை ஓரங்களில் கிடக்கும் கட்டுமான பொருட்களை, வரும் 21க்குள் அகற்ற வேண்டும்' என, தலைமை பொறியாளர்களுக்கு, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அவர் பிறப்பித்த உத்தரவு:நகரின் முக்கியமான சாலைகள், மார்க்கெட் பகுதிகள், கால்வாய்கள் உட்பட பல்வேறு இடங்களில் கட்டட கட்டுமான பொருட்களை கொட்டி, மக்களின்



பெங்களூரு-'பெங்களூரின் சாலை ஓரங்களில் கிடக்கும் கட்டுமான பொருட்களை, வரும் 21க்குள் அகற்ற வேண்டும்' என, தலைமை பொறியாளர்களுக்கு, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அவர் பிறப்பித்த உத்தரவு:நகரின் முக்கியமான சாலைகள், மார்க்கெட் பகுதிகள், கால்வாய்கள் உட்பட பல்வேறு இடங்களில் கட்டட கட்டுமான பொருட்களை கொட்டி, மக்களின் நடமாட்டத்துக்கு சிலர் தொந்தரவு ஏற்படுத்துவது தெரிகிறது.ஏற்கனவே பல மண்டலங்களுக்கு சென்று பார்வையிட்ட போது, கட்டட பொருட்கள் கிடப்பது தெரிந்தது. இதை அப்புறப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.ஆனால், அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. மக்கள் நடமாடும் இடத்தில் கிடக்கும் மணல், ஜல்லிக்கற்கள், பைப்புகள், இரும்பு கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.வரும் 21க்குள், இவற்றை அகற்றி அறிக்கை அளிக்க வேண்டும். ஒருவேளை அறிக்கை அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளர், செயல் நிர்வாக பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர் வாரியம், பெஸ்காம், ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம், பி.டி.ஏ., போன்ற அரசு சார்ந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளின் பொருட்களையும் அகற்றி, மக்களின் போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X