அசாமில் வேட்டைக்காரர்களை வேட்டையாடும் 'கே 9 யூனிட்'

Added : ஆக 20, 2022 | |
Advertisement
கவுகாத்தி: அசாமில் விலங்குகள், பறவைகளை வேட்டையாடுவோரை பிடிக்க, நாட்டிலேயே முதல் முறையாக, 'கே 9 யூனிட்' என்ற பெயரில் மோப்ப நாய் படை செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள, அரசு வனவிலங்கு பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்களில் வேட்டைக்காரர்கள் அடிக்கடி ஊடுருவினர். இவர்களின் வேட்டையில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பலியாகின. வனத்துறை ஊழியர்களையும் இவர்கள்
K9, dog squad, Assam, Kaziranga National Park

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கவுகாத்தி: அசாமில் விலங்குகள், பறவைகளை வேட்டையாடுவோரை பிடிக்க, நாட்டிலேயே முதல் முறையாக, 'கே 9 யூனிட்' என்ற பெயரில் மோப்ப நாய் படை செயல்பட்டு வருகிறது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள, அரசு வனவிலங்கு பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்களில் வேட்டைக்காரர்கள் அடிக்கடி ஊடுருவினர். இவர்களின் வேட்டையில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பலியாகின. வனத்துறை ஊழியர்களையும் இவர்கள் தாக்கினர். இந்த நிகழ்வை தடுப்பதற்காக நாட்டிலேயே முதல் முறையாக, 'கே 9 யூனிட்' என்ற பெயரில் மோப்ப நாய் படை, 2011ல் இங்கு துவக்கப்பட்டது.


latest tamil news



பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு மோப்ப நாய் மட்டுமே முதலில் இந்த படைப் பிரிவில் இருந்தது. தற்போது இதில் ஏழு நாய்கள் உள்ளன. மேலும் இரண்டு நாய்கள் தற்போது பயிற்சியில் உள்ளன. இவற்றில் 'ஜோர்பா' என்ற நாய், இதுவரை 60க்கும் மேற்பட்ட வேட்டைக்காரர்களை பிடித்துக் கொடுத்துள்ளது. காஸிரங்கா வன விலங்கு பூங்காவில் தான் அதிகமான வேட்டைக்காரர்கள் பிடிபட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X