துறை சார்ந்த கூட்டத்தில் உறவினர்: லாலு மகன் செயலால் சர்ச்சை

Added : ஆக 20, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
பாட்னா: முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீஹார் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், தன் மைத்துனரை அருகில் அமர வைத்து, துறை சார்ந்த கூட்டத்தை நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மீண்டும் முதல்வர் பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில்
Lalu Prasad, Tej Pratap, govt meet, son in law, Shailesh Kumar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீஹார் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், தன் மைத்துனரை அருகில் அமர வைத்து, துறை சார்ந்த கூட்டத்தை நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


மீண்டும் முதல்வர்

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

புதிய அமைச்சரவையில், லாலுவின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், பீஹாரில் வனத்துறை சார்ந்த கூட்டம் சமீபத்தில் நடந்தது.


latest tamil news
புகைப்படம்:

கூட்டம் நடப்பதற்கு முன், தேஜ் பிரதாபின் சகோதரியும், எம்.பி.,யுமான மிசா பாரதியின் கணவர் சைலேஷ்குமார், தேஜ் பிரதாபை சந்தித்து வாழ்த்து கூற வந்தார். அவரை தன் இருக்கை அருகே அமர வைத்து, துறை சார்ந்த கூட்டத்தை அமைச்சர் தேஜ் பிரதாப் நடத்தி முடித்தார். கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இதையடுத்து, அரசுக்கு சம்பந்தமில்லாத நபரை வைத்து, தேஜ் பிரதாப் துறை சார்ந்த கூட்டத்தை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ''ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி அடிப்படையில் குடும்ப நலனை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்பதால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை,'' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிகில் ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-202212:39:53 IST Report Abuse
ஆரூர் ரங் விடியல் கூட அரசுப்பணிக்காக டெல்லிக்கு சென்ற போது, 😉😉மருமகனை அழைத்துச் சென்றார். யாரும் ஆட்சேபிக்கவில்லை .
Rate this:
Cancel
Honda -  ( Posted via: Dinamalar Android App )
20-ஆக-202210:01:49 IST Report Abuse
Honda இதில வேற பிரதம மந்திரி பதவி ததேவையாம்
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
20-ஆக-202207:54:44 IST Report Abuse
Balasubramanian இவரு நம்ப ஆளு, என முறைசாரா அதிகாரம் (Informal power) வழங்கி உள்ளார். இதை அதிகாரிகள் புரிந்து கொண்டு பணிவாக நடந்து கொள்வார்கள். குடும்ப அரசியலில், மாமன், மருமகன், மகன், மச்சான், எல்லோருக்கும் பங்கு உண்டு என்பது நமக்கு தெரியாதா ஒன்றா? கண்டுக்காதீங்க இப்படி காற்றுள்ள போதே கல்லா கட்டாம, தேர்தல் செலவுகளுக்கு பணம் எப்படி புரட்டுவதாம்? 😀
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X