இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று துவக்கம்: சிறப்பு பிரிவு ஒதுக்கீடு முறை என்ன?

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | |
Advertisement
சென்னை: தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இன்று(ஆக.,20) துவங்க உள்ள சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு விருப்ப பதிவு மற்றும் கல்லுாரி ஒதுக்கீடு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள விபரம்:* சிறப்பு பிரிவில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினரில், அரசு பள்ளிகளில் படித்து, 7.5 சதவீதம் இட
TNEA Counselling 2022,Engineering,Counselling,TNEA 2022,இன்ஜினியரிங் கவுன்சிலிங், துவக்கம், சிறப்பு பிரிவு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இன்று(ஆக.,20) துவங்க உள்ள சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு விருப்ப பதிவு மற்றும் கல்லுாரி ஒதுக்கீடு முறைகள் வெளியிடப்

பட்டுள்ளன.



இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள விபரம்:


* சிறப்பு பிரிவில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினரில், அரசு பள்ளிகளில் படித்து, 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது. அதாவது, இன்று காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணிக்குள் விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு பட்டியலை பதிவு செய்ய வேண்டும்



* இன்று இரவு 7:00 மணிக்கு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை 'ஆன்லைனில்' வெளியாகும். அந்த கல்லுாரி தங்களுக்கு பிடித்திருந்தால், நாளை காலை 10:00 மணிக்குள், ஆன்லைனில் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்தவர்களுக்கு மட்டும், நாளை மதியம் 12:00 மணிக்கு, கல்லுாரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் கிடைக்கும்



* இந்த கவுன்சிலிங்கில் இடம் உறுதி செய்யாதவர்கள், நாளை நடக்கும் சிறப்பு பிரிவின் பொது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். நாளை மாலை 5:00 முதல், நாளை மறுநாள் மாலை 7:00 மணிக்குள், விருப்பக் கல்லுாரிகளை பதிவு செய்ய வேண்டும். வரும், 23ம் தேதி காலை 8:00 மணிக்கு, கல்லுாரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்



* அந்த கல்லுாரி பிடித்திருந்தால், 23ம் தேதி இரவு 7:00 மணிக்குள், அந்த கல்லுாரியை ஆன்லைனில் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்தவர்களுக்கு, 24ம் தேதி காலை 10:00 மணிக்கு, கல்லுாரி ஒதுக்கீட்டு உத்தரவு, ஆன்லைனில் கிடைக்கும்



latest tamil news



கட்டண சலுகை


* இந்த சிறப்பு பிரிவில் எந்த கல்லுாரியையும் உறுதி செய்யாமலும், ஒதுக்கீடு கிடைக்காமலும் உள்ளவர்கள், வரும் 25ம் தேதி துவங்கும் பொது கவுன்சிலிங்கில், தங்களுக்கான தரவரிசைப்படி பங்கேற்கலாம். ஆனால், பொது கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு கிடைத்து விட்டால், அந்த ஒதுக்கீட்டில், ஒரு வாரத்துக்குள் கட்டாயம் சேர வேண்டும். இல்லாவிட்டால் அந்த இடம், அடுத்த சுற்று மாணவருக்கு ஒதுக்கப்படும்



* சிறப்பு பிரிவில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெறப்பட்ட கல்லுாரியில் சேர்ந்தால் மட்டுமே, கட்டணச் சலுகை வழங்கப்படும். 7.5 சதவீதம் இல்லாத சிறப்பு பிரிவில் ஒதுக்கீடு பெற்று, அந்த கல்லுாரிகளில் சேர்ந்தால், அதற்கு கல்லுாரி விதிப்படி, கட்டணம் செலுத்த வேண்டும். கவுன்சிலிங்குக்கான தேதி மற்றும் விபரங்களில் சந்தேகங்கள் எழுந்தால், www.tneaonline.org என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X