தி.மு.க., அரசு மீது மா.கம்யூ., சந்தேகம்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
மதுரை : ''துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை விபரங்களை, தமிழக அரசு முழுமையாக வெளியிடத் தயங்குவது, பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் உருவாக்குகிறது,'' என, தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது:ஸ்டெர்லைட் ஆலையை மூடக்
தி.மு.க. அரசு, மார்க்சிஸ்ட் கம்யூ. சந்தேகம், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு,


மதுரை : ''துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை விபரங்களை, தமிழக அரசு முழுமையாக வெளியிடத் தயங்குவது, பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் உருவாக்குகிறது,'' என, தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கை, கசிந்துள்ளது.இதன் வாயிலாக, ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.


latest tamil news


மூவாயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை, தமிழக அரசு முழுமையாக வெளியிட தயங்குவது, பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் உருவாக்குகிறது.இச்சம்பவம் குறித்து, நீதிமன்றத்தில் சி.பி.ஐ., சமர்ப்பித்துள்ள குற்றப் பத்திரிகை விபரங்கள், ஏற்புடையதாக இல்லை. விசாரணையை நேர்மையான சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.இது குறித்து, நீதிமன்றத்தில் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-202212:53:53 IST Report Abuse
SUBBU,MADURAI ரொம்பவும் பேசுனீன்னா நான் கொடுத்து நீ சப்புக் கொட்டி தின்ற அந்த (25 கோடி)குச்சி ரொட்டியையும் குருவி மிட்டாயையும் கக்கு என்று நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேப்பானுகளே இந்த வில்லங்கம் புடிச்ச திமுக காரனுங்க அப்படி கேட்டா இந்த கம்யூனிஸ்ட் தலைவர் என்ன பண்ணுவார்.திமுககாரனுக கொடுத்த 25 கோடிகளை முன்பு போல உண்டியல் குலுக்கி பிச்சையெடுத்து அவிங்க கடனை அடைக்க முடியுமா?ஆகையால் இந்த கம்யூனிஸ்ட்கள் வீர வசனம் பேசுவதை விட்டு விட்டு மேற்கொண்டு அடுத்த எலக்க்ஷனுக்கு திமுகவிடம் ஒரு ஐம்பது கோடியாவது பிச்சை பெறுவது எப்படி என்று தங்கள் துருப்பிடித்த பீரோவான பொலிட் பீரோவை கூட்டி ஆலோசனை நடத்துவதுதான் அவர்களுக்கு நன்மை பயக்கும்.
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
20-ஆக-202211:42:27 IST Report Abuse
Nakkeeran communist party of India என்பதை மாற்றி opportunist party of india என வைத்துக் கொள்ளலாம்
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
20-ஆக-202210:48:43 IST Report Abuse
veeramani எதற்கு எடுத்தாலும் சிபிஐ விசாரணை தேவை என்றால் தமிழக காவல்துறையின்மீது நம்பிக்கையில்லையா??? திரு பாலகிருஷ்ணன் அவர்களே முதலில் எதற்கு விசாரணை?? ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரியை துரத்தி உங்களின் உலகபாஸ் சீனாவிற்கு மிகப்பெரிய நன்றியினை கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு தேறுமா??? ஸ்டெர்லைட் மூடியாதினால் கிட்டத்தட்ட இருப்பது ஆயிரம் தொளிலாளர்கள் உணவு கிடைக்காமல் உள்ளனர். சுமார் இரண்டு ஆயிரம் லாரிகள் ரெகுலர் ட்ரிப்புகளை நிறுத்தியது. இத்தனை நாள் நீங்கள் தூங்கினீர்களா?? கோவையில் காப்பெற் மெட்டல் விலை ஏற்றதினால் மோட்டார், பம்ப் கல் உற்பத்தி நின்றது. சுமார் நாற்பது ஆயிரம் குடும்பங்கள் திரும்ப ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இவர்கள் சாப்பாடு ??? உங்களின் சித்தாந்தங்களை முதலில் நமது எதிரியான சீனாவில் அமுல்படுத்துங்கள். ஒன்று நீங்கள் இந்திய சித்தாந்தத்திற்கு மாருங்கள் அல்லது சீனாவிற்கு செல்லுங்கள். இந்திய முன்னேற்றத்தை முட்டுக்கட்டை போடாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X