பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Added : ஆக 20, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம்---வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வட கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி ஒடிசா பாலசோர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 310 கி.மீ.,லும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 250 கி.மீ.,லும், சாகர் தீவு
பாம்பன் துறைமுகம் , புயல் எச்சரிக்கை,  ராமேஸ்வரம், Pampan Harbour, Storm Warning, Rameswaram,

ராமேஸ்வரம்---வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வட கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி ஒடிசா பாலசோர் துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 310 கி.மீ.,லும், மேற்குவங்கம் திகா துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 250 கி.மீ.,லும், சாகர் தீவு தென் கிழக்கில் 210 கி.மீ.,ல் மையம் கொண்டுள்ளது.

இப்புயலால் தமிழக கடலோர மாவட்டங்களில் மேக மூட்டத்துடன் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் நேற்று மதியம் பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினர். ஆனால் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் நேற்று இயல்பான நிலையே இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X