புதுப்பட்டினம் மழை நீர் வடிகால்வாயை தாறுமாறாக கட்டி அடாவடி!

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மாமல்லபுரம் : புதுப்பட்டினம் ஊராட்சி பகுதியில், மழை நீர் வடிகால்வாய் மிகவும் உயரமாக கட்டப்படுவதால், பள்ளி, வீடுகள் தாழ்ந்து, மழைக்காலத்தில் வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால், இப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.கல்பாக்கம் நகரியம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதி, 15 வார்டுகளுடன் உள்ளது.அணுசக்தி துறையின், கல்பாக்கம் நகரிய பகுதி, ஊராட்சியின் எட்டு வார்டுகளாக
புதுப்பட்டினம்,  மழை நீர் வடிகால், மக்கள் குமுறல்,


மாமல்லபுரம் : புதுப்பட்டினம் ஊராட்சி பகுதியில், மழை நீர் வடிகால்வாய் மிகவும் உயரமாக கட்டப்படுவதால், பள்ளி, வீடுகள் தாழ்ந்து, மழைக்காலத்தில் வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால், இப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

கல்பாக்கம் நகரியம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதி, 15 வார்டுகளுடன் உள்ளது.அணுசக்தி துறையின், கல்பாக்கம் நகரிய பகுதி, ஊராட்சியின் எட்டு வார்டுகளாக அமைந்து, முக்கிய ஊராட்சியாகவும் உள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட நகரிய பகுதியை, அணுசக்தி துறை சிறப்பாக பராமரிக்கிறது.


பாதிப்பு



இதே ஊராட்சியின், புதுப்பட்டினம் பகுதி, இதற்கு நேர்மாறான சீர்கேடாக உள்ளது. இப்பகுதியில், மழைக்கால வெள்ள பாதிப்பு, ஆண்டுதோறும் பெரும் சிக்கலாக உள்ளது. இங்குள்ள பல்லவன் நகர், ஆர்.எம்.ஐ,, நகர், தாவீது நகர் உள்ளிட்ட வசிப்பிட பகுதிகள், தாழ்வாக உள்ளன.பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கால்வாய் நீர்பரப்பு பகுதியை ஒட்டி, இப்பகுதிகள் உள்ளதால், மழைக் காலத்தில் பெய்யும் நீர், பக்கிங்ஹாம் கால்வாய் வெள்ளம் என சூழ்ந்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இப்பாதிப்பை தவிர்க்க, மழை நீர் வடிகால் அமைக்க முடிவெடுத்த, வட்டார வளர்ச்சி நிர்வாகம், தற்போது கால்வாய் அமைக்கிறது.


சாலை பெயர்ப்பு



இப்பணி நடக்கும் ஆர்.எம்.ஐ., நகரில், கலைஞர் கருணாநிதி தெரு வடிகால்வாய் உயரமாக கட்டப்படுவதால், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி, வீடுகளை மழை வெள்ளம் மூழ்கடிக்கும் நிலை ஏற்படும்.இத்தெருவில் இடம் இல்லாத நிலையில், கால்வாய் அமைக்காமல் தவிர்க்க வேண்டும். ஆனால், அங்கிருந்த கான்கிரீட் சாலையை முற்றிலும் பெயர்த்து, அதன் மையத்தில், கான்கிரீட் வடிகால்வாய் கட்டப்படுகிறது.வீடுகள் அமைந்துள்ள நிலமட்டத்திற்கேற்ப, சாலையும் அமைந்துஇருந்தது.


latest tamil news




இதே மட்டத்திற்கேற்ப கால்வாயை அமைக்காமல், இயல்பான மட்டத்திலிருந்து, பல அடிகள் உயரத்தில் கட்டப்படுகிறது. கால்வாய் உயர்த்தப்பட்டதால், இதே உயர சாலையும் அமைக்கப்பட உள்ளது.இதனால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஏராளமான வீடுகள், பல அடிகள் கீழ் தாழ்ந்து, அவற்றில் மழைக்கால வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இத்தெரு, மேட்டுப் பகுதியான, பழைய கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் துவங்கி, பக்கிங்ஹாம் கால்வாய் தாழ்வு பகுதி வரை, சரிவாகவே உள்ளதால், நிலமட்டத்திற்கேற்ப கால்வாய் அமைத்தாலே சரியாக அமையும்.ஆனால், நிலவியல், பொறியியல் விதிகளை புறக்கணித்து, தான்தோன்றித்தனமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு, மிக உயரமாக கால்வாய் அமைக்கப்படுகிறது.


திட்ட மதிப்பீடு



இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:இங்கு, புதிதாக கட்டப்படும் வீடுகள் மட்டுமே, நிலமட்டத்திலிருந்து சற்று உயரம் உயர்த்தி கட்டப்படுகிறது. தொடக்கப் பள்ளி, பழைய வீடுகள், அதலபாதாளத்தில் உள்ளன.புதிய கால்வாயால் கண்டிப்பாக பாதிக்கப்படு வோம். பணி துவக்கியபோது எதிர்ப்பு தெரிவித்தும், அலட்சியப்படுத்தி கட்டுகின்றனர்.இப்பணியை உயர்அதிகாரிகள் ஆய்வு செய்து, வீடுகள் பாதிக்காத வகையில், வடிகால் உயர அமைப்பை குறைத்து, முறைப்படுத்த வேண்டும். மற்ற தெருக்களிலும், உயரம் குறைவாக அமைக்க, அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி பொறியாளர் ஆகியோரிடம், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விபரங்கள் அறிய முயன்றும், அவர்கள் பதில் அளிக்கவில்லை.

விதிகளுக்குப் புறம்பாக பணி

வெள்ளப் போக்கு வடிகால்வாய் என்றாலும், வீடுகளிலிருந்து கழிவு நீர் வெளியேற்றும் வசதிக்காகவே, உள்ளாட்சி நிர்வாகங்கள், இதை அமைக்கின்றன. சாலையிலிருந்து, குறிப்பிட்ட இடைவெளி விட்டு, இதை அமைக்க வேண்டும். மழை நீர் வடிகால்வாய் என்பதால், மூடியும் அமைக்கக்கூடாது. சாலையை ஒட்டி இடம் இல்லையெனில், கால்வாய் அமைக்கவும் கூடாது. இங்கு, இடமே இல்லாத நிலையில், விதிகளுக்கு புறம்பாக, சாலையை பெயர்த்து, தெருவின் மைய பகுதியில் கால்வாய் அமைத்து, மேற்புறம் மூடப்படுகிறது.



வெள்ளப் போக்கு வடிகால்வாய் என்றாலும், வீடுகளிலிருந்து கழிவு நீர் வெளியேற்றும் வசதிக்காகவே, உள்ளாட்சி நிர்வாகங்கள், இதை அமைக்கின்றன. சாலையிலிருந்து, குறிப்பிட்ட இடைவெளி விட்டு, இதை அமைக்க வேண்டும். மழை நீர் வடிகால்வாய் என்பதால், மூடியும் அமைக்கக்கூடாது. சாலையை ஒட்டி இடம் இல்லையெனில், கால்வாய் அமைக்கவும் கூடாது. இங்கு, இடமே இல்லாத நிலையில், விதிகளுக்கு புறம்பாக, சாலையை பெயர்த்து, தெருவின் மைய பகுதியில் கால்வாய் அமைத்து, மேற்புறம் மூடப்படுகிறது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
20-ஆக-202215:27:43 IST Report Abuse
r.sundaram பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள், என்பது உண்மையாகிறது. இன்னமும் நான்கு வருடங்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். தகுதியானவர்களுக்கு ஓட்டுப்போட்டால், வேலைகள் தகுதியாக இருக்கும். நீங்கள் தகுதியானவர்களுக்கு ஒட்டு போட வில்லையே, இப்போது முட்டி மோதிக் கொண்டு அழுது என்ன பயன்?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
20-ஆக-202214:46:55 IST Report Abuse
raja கோமாளிகள் ஆட்சியில் கோமாளித்தனம் நிறையவே இருக்கும். தகுதியே இல்லாதவணுவொளுக்கு ஒட்டு போடீங்கள்ல அனுபவிங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-ஆக-202209:42:56 IST Report Abuse
duruvasar கெளரவம் படத்தில் சிவாஜி பேசும் வசன பாணியில் சொல்ல வேண்டும் என்றால் கால்வாய் கடுனும்னு சொன்னாங்க எப்படி கட்டனும்னு சொல்லலியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X