மதுரை எய்ம்ஸ் பணி 6 மாதத்தில் துவக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
ராமநாதபுரம் : ''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான புதிய திட்ட மதிப்பீடு, 1,977.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, ஆறு மாதங்களில் பணிகள் துவங்கும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில், 8.80 கோடி ரூபாயில், 28 மருத்துவ கட்டடங்களை, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.அவர்
மதுரை எய்ம்ஸ், துவக்கம், அமைச்சர் சுப்பிரமணியன்,


ராமநாதபுரம் : ''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான புதிய திட்ட மதிப்பீடு, 1,977.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, ஆறு மாதங்களில் பணிகள் துவங்கும்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 8.80 கோடி ரூபாயில், 28 மருத்துவ கட்டடங்களை, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.அவர் கூறியதாவது:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 1,264 கோடி ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டப்பட்டதுடன் நிறுத்தப்பட்டது.

தற்போது புதிய திட்ட மதிப்பீடு, 1,977.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.ஜப்பான் நாட்டின், 'ஜைகா' நிறுவனம், 82 சதவீதம் நிதியுதவியாக, 1,627 கோடி ரூபாயும், மீதம், 18 சதவீதம் மத்திய அரசின் நிதியும் வழங்கப்படுகிறது.


latest tamil news


வரைபடம் தயாரித்து ஜைகா நிறுவன ஒப்புதல் பெறப்பட்டதும், ஆறு மாதங்களில் பணிகள் துவங்கும். பார்த்திபனுாரில், 1 கோடி ரூபாயில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி விரைவில் துவங்கப்படும்.மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்களில், மருத்துவ கட்டமைப்பு தரம் மேம்படுத்தப்படும். வட மாநில சுற்றுலா பயணியர் வரும் ராமேஸ்வரத்தில், உயர் மருத்துவ சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில், சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு, 48 மணி நேரத்தில், 1 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக ஒன்றரை ஆண்டுகளில், 1 லட்சத்து 5,576 பேருக்கு, 94.69 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-ஆக-202216:40:53 IST Report Abuse
duruvasar செங்கற்க்கற்களை பாதுகாக்க ஒரு வல்லுநர் குழு அமைத்து பாதுகாப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள் அய்யா.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
20-ஆக-202212:39:26 IST Report Abuse
madhavan rajan உதயநிதி பத்துக்கு வைத்திருக்கிற ஏய்ம்ஸ் செங்கல்களை வாங்கி பயன்படுத்திக்கோங்க. இல்லைனா அவர் அந்த செங்கல்லேயே சில பங்களாக்கள் கட்டிவிடுவார்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
20-ஆக-202212:25:40 IST Report Abuse
madhavan rajan சீக்கிரமா துவங்கிடுங்க இல்லைன்னா அடுத்த மேடையிலே உதயநிதி சிமின்ட் மூட்டையை கொண்டுவந்து காட்டி மாநில ஆட்சியை அசிங்கப்படுத்துவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X