கட்டட அனுமதி ஆணை சட்டப்படி செல்லுமா

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : கட்டுமான திட்டஅனுமதி ஆணை அனைத்தும் உயர் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்பதால் வீடு வாங்கும் மக்கள் மத்தியிலும் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும மான சி.எம்.டி.ஏ. வாயிலாக கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.நகர் ஊரமைப்பு சட்டப்படி
 கட்டட அனுமதி ஆணை,  சட்டப்படி செல்லுமா, உயர்நீதிமன்றம், தீர்ப்பு,


சென்னை : கட்டுமான திட்டஅனுமதி ஆணை அனைத்தும் உயர் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்பதால் வீடு வாங்கும் மக்கள் மத்தியிலும் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும மான சி.எம்.டி.ஏ. வாயிலாக கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.நகர் ஊரமைப்பு சட்டப்படி இதற்கான பொது கட்டட விதிகள அமல்படுத்தப்படுகின் றன.உள்ளாட்சி அமைப்புகள் நகர் ஊரமைப்பு துறை ஆகியவற்றில் ஒரே விதமான வழிமுறையில் கட்டட அனுமதி வழங்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் தொழில்நுட்ப ரீதியாக சில குறைபாடுகள் இருப்பதாககூறி நகரமைப்பு வல்லுனர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'அனைத்து திட்ட அனு மதி ஆணைகளும் இந்தவழக்கின் இறுதி தீர்ப்பு உட்பட்டது' என 2019ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.கட்டட அனுமதி ஆணையிலும் வரைபடத்திலும் 'இது பொது கட்டட விதிகள் தொடர்பான வழக்கின் இறுதி முடிவுக்கு உட்பட்டது' என்று குறிப்படப்படுகிறது.



latest tamil news



இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:
இந்த நிபந்தனைவீடு வாங்குவோருக்குசிக்கலை ஏற்படுத்துகிறது.வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தால் இந்த அனுமதிகள்அனைத்தும் ரத்தாகி விடுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று கூறிவிட்டு வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை சும்மா இருப்பது நியாயமா? முறையாக அனைத்து கட்டணமும் செலுத்தி பெறப்படும் திட்ட அனுமதி சட்டப்படி செல்லுமா என்பது கேள்விக்குறியாக இருப்பது அரசுக்கே கவுரவ பிரச்னையாக தெரியவில்லையா?

இதனால் புதிதாக வீடு வாங்குவோர் வங்கிக் கடனுக்கு செல்லும்போது சிக்கல் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
20-ஆக-202215:43:59 IST Report Abuse
krish Buyer beware. ensure builder compensates for deviation and resultant loss. It is implied law that all Governmental decisions and trade violations are subjected to judicial judgement and interpretations when taken to the courts for justice, Yes the truth is that we(majority of us) don't have the will, time, energy and money to fight the powers that be for getting the justice.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
20-ஆக-202212:22:55 IST Report Abuse
GMM கட்டட அனுமதி (ஊழல்) ஆணை Town and country planning act க்கு எதிராக இருந்தால் சட்டபடி செல்லாது. அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் வானளாவிய அதிகாரம் உள்ளது போல் பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசு அதிகாரிகள் அரசியல் அமைச்சர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். பவர் அக்ரீமெண்ட் மூலம் கிராயமாகும் சுத்த கிரயம் ஆகாத சொத்துக்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது இல்லை. ரியல் எஸ்டேட் வியாபாரம் கறுப்பு பணம் கலந்தது. நீதிமன்ற தீர்ப்பு எதிர்கால நலம் கருதி இருக்க வேண்டும். பதிவு, நில வரி, ஒப்புதல் கட்டணம்... செலுத்தி விட்டால் சொத்து சட்டப்படி செல்லும் என்று கருத முடியாது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
20-ஆக-202211:35:49 IST Report Abuse
அசோக்ராஜ் ஐஏஎஸ் அதிகாரிகள் நீர் நிலைகளுக்கு பட்டா போட்டு எடுத்துக்கொண்டு வீடு கட்டி எஞ்சாய் பண்ணும் மாநிலத்தில், உலகனேரியில் உயர்நீதி மன்றமே இயங்கும் மாநிலத்தில் இந்த கேஸ் எல்லாம் பெரிய விஷயமா? ஜுஜுபி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X