மஹாராஷ்டிரா மாவோயிஸ்ட் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கைது

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
மஹாராஷ்டிராவில் வெடி மருந்து சப்ளை செய்த வழக்கில் தேடப்பட்ட மாவோயிஸ்ட், தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டியில் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் சிவக்குமார்; பைக் மெக்கானிக்கல். இவர், இருளப்பட்டியில் நடக்கும் தேர் திருவிழாவுக்கு திருப்பூரில் இருக்கும் தன் சித்தி மகள் அஞ்சலியை அழைத்திருந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி, மாவோயிஸ்ட்,  கைது,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மஹாராஷ்டிராவில் வெடி மருந்து சப்ளை செய்த வழக்கில் தேடப்பட்ட மாவோயிஸ்ட், தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டியில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் சிவக்குமார்; பைக் மெக்கானிக்கல். இவர், இருளப்பட்டியில் நடக்கும் தேர் திருவிழாவுக்கு திருப்பூரில் இருக்கும் தன் சித்தி மகள் அஞ்சலியை அழைத்திருந்தார். இதையடுத்து அவர், கணவர் சீனிவாச முல்லாகெவுடு, 23, மற்றும் தன் இரு குழந்தைகளுடன் பாப்பம்பாடி வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஆக.,19) நள்ளிரவில் மஹாராஷ்டிரா போலீசார், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வனை சந்தித்தனர். அப்போது, மஹாராஷ்டிராவில் இருந்து தப்பித்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர், பாப்பம்பாடியில் பதுங்கியிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி போலீசார், மொபைபோன் டவர் மூலம், சிவக்குமார் வீட்டில், மாவோயிஸ்ட் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

அங்கு சென்ற போலீசார் இரவு, 10:00 மணியளவில் சிவக்குமார் வீட்டை சுற்றி வளைத்து, மாவோயிஸ்ட் சீனிவாச முல்லாகெவுடுவை கைது செய்தனர். நள்ளிரவு, 2:00 மணி வரை, தர்மபுரி எஸ்.பி., கலைசெல்வன், கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் மஹாராஷ்டிரா போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், மஹாராஷ்டிரா மாநிலம், களிரோலி மாவட்டம், தாமராஜா அடுத்த பங்காரப்பேட்டையை சேர்ந்த முல்லா என்பவரின் மகன் சீனிவாச முல்லாகெவுடு என்பதும், தாமராஜா போலீஸ் ஸ்டேஷனில் கடந்த பிப்ரவரியில் அவர் மீது, மாவோயிஸ்ட்களுக்கு வெடிமருந்து சப்ளை செய்தது, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட, 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர், தன் மனைவி அஞ்சலி, 20, மற்றும் குழந்தைகளுடன் தமிழகத்திற்கு தப்பித்து, திருப்பூரில் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.


latest tamil news


இவரின் மொபைல்போன் உரையாடலை கண்காணித்த மஹாராஷ்டிரா போலீசார், கடந்த மூன்று நாட்களாக, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியில் அவர் இருப்பதை அறிந்து தர்மபுரி வந்துள்ளனர். பின், தர்மபுரி போலீசார் உதவியுடன், மாவோயிஸ்ட் சீனிவாச முல்லாகெவுடுவை கைது செய்து, அவரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், மஹாராஷ்டிரா அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவரது உறவினர்களிடம், ஏ.பள்ளிப்பட்டி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poochandi - Mumbai,இந்தியா
20-ஆக-202215:44:17 IST Report Abuse
Poochandi விடியலோ விடியல்
Rate this:
Cancel
20-ஆக-202215:35:11 IST Report Abuse
ஆரூர் ரங் ஆள்பவர்கள் எப்படியோ அதற்கேற்ற நபர்கள் அடைக்கலம் தேடி வருவது இயற்கை. இன்னும் எத்தனை ஐ எஸ்😡 ஆட்கள் இங்கு பதுங்கியுள்ளனரோ?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
20-ஆக-202214:56:17 IST Report Abuse
raja கூட்டாளிகள் தான் இந்த கம்னியூஸ்ட் மாவோயிஸ்ட்டு எல்லாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X