10 தஞ்சை புவிசார் குறியீடு பொருட்கள் கண்காட்சி| Dinamalar

10 தஞ்சை புவிசார் குறியீடு பொருட்கள் கண்காட்சி

Added : ஆக 20, 2022 | |
திருமங்கலம் : சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், தஞ்சாவூர் புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்களின் கண்காட்சியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், நேற்று துவக்கி வைத்தார்.தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று
தஞ்சாவூர் புவிசார் குறியீடுகள்,  அமைச்சர் மகேஷ், புவிசார் குறியீடு கண்காட்சி, Thanjavur Geocodes, Minister Mahesh, Geocode Exhibition,


திருமங்கலம் : சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், தஞ்சாவூர் புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்களின் கண்காட்சியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், நேற்று துவக்கி வைத்தார்.தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நேற்று துவங்கியது.மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், நேற்று திறந்து வைத்தார்.இக்கண்காட்சியில், பிரசித்தி பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் வீணை, ஓவியம், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், கலைத்தட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், ஐம்பொன் சிலைகள், நாச்சியார் கோவில் குத்துவிளக்குகள் உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற, 10 பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கண்காட்சியை துவங்கிய பின், அமைச்சர் மகேஷ் பேசியதாவது:தமிழகத்தில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளன. அவற்றில், தஞ்சை மாவட்டத்தில், 10பொருட்களுக்கு பெறப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் தயாரிக்கும் 24 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு, முதல்வர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.புவிசார் குறியீடு வழங்குவதற்கான மண்டல மையம் சென்னையில் இருந்தாலும், நாம் குறைந்த அளவிலேயே புவிசார் குறியீடு பெற்றுள்ளோம். எனவே, அதிக அளவில் புவிசார் குறியீடுகளை பெறுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.புவிசார் குறியீடுகளை பெற்ற பொருட்களை விற்பனை செய்வதன் வாயிலாக, தமிழக பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விவரங்கள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X