பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி வழக்கில் ஆவணங்கள் மாயமானதாக தகவல்

Added : ஆக 20, 2022 | |
Advertisement
விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில், சில ஆவணங்கள் காணாமல் போனதாக பரவிய தகவலால் பரபரப்பு நிலவியது. பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது.நேற்று முன்தினம் நடந்த வழக்கு

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கில், சில ஆவணங்கள் காணாமல் போனதாக பரவிய தகவலால் பரபரப்பு நிலவியது.



பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, மாஜி சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கில், தற்போது சாட்சி விசாரணை நடந்து வருகிறது.நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின் போது, விக்கிரவாண்டி, பரனுார், செங்குறிச்சி டோல்கேட் ஊழியர்கள் ஐந்து பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.



அப்போது, சிறப்பு டி.ஜி.பி., - பெண் அதிகாரி மொபைல் போனில் பேசிய உரையாடல் பதிவுகள், 'வாட்ஸ் ஆப்' மெசேஜ், மொபைல் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை நீதிபதி புஷ்பராணி கேட்டுள்ளார்.அப்போது, ஆவணங்கள் கிடைக்காமல் தேடி உள்ளனர். உடனடியாக கிடைக்காததால் ஆவணங்களை தேடும் படி, கோர்ட் ஊழியர்களுக்கும், மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.



இந்நிலையில், அந்த ஆவணங்கள் கோர்ட்டில் வேறு இடத்தில் இருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். .


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X