'உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சத்தமின்றி சாதனை'

Updated : ஆக 20, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் ஏற்றுமதிக்கு நிகரான மதிப்பில், உள்நாட்டு சந்தைக்கான ஆடை உற்பத்தி நடக்கிறது. உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கின்றனர்,' என, 'கிளாசிக் போலோ' குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சிவராம் பேசினார்.தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி, அவிநாசி அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. நேற்று காலை

திருப்பூர் : திருப்பூரில் ஏற்றுமதிக்கு நிகரான மதிப்பில், உள்நாட்டு சந்தைக்கான ஆடை உற்பத்தி நடக்கிறது. உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கின்றனர்,' என, 'கிளாசிக் போலோ' குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சிவராம் பேசினார்.



latest tamil news



தேசிய ஆடை வர்த்தக கண்காட்சி, அவிநாசி அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது. நேற்று காலை நடந்த துவக்க விழாவில், பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்; அவர்கள் தெரிவித்த கருத்துகள்:மேயர் தினேஷ்குமார்:தமிழக அரசு, தொழில் வளர்ச்சியில் மாநிலத்தை முதலிடத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உலகளாவிய பிராண்டட் நிறுவனங்களை மிஞ்சும்வகையில், திருப்பூர் நிறுவனங்கள் சிறந்த தரத்தில் உள்நாட்டு சந்தைக்கான ஆடை ரகங்களை தயாரிக்கின்றன. ஏற்றுமதியைபோன்று உள்நாட்டு ஆடை வர்த்தகத்திலும், திருப்பூர் முத்திரை பதிக்கும். தொழில் வளர்ச்சிக்கு தேவையானவற்றை எல்லாம் முதல்வர் செய்துதருவார்.

துணைமேயர் பாலசுப்பிரமணியன்:திருப்பூரின் தொழில் பயணம், உள்நாட்டு ஆடை உற்பத்தியுடனேயே துவங்கியது. தற்போது, புதுப்புது ரகங்களில் ஆடை ரகங்கள் தயாரிக்கப்பட்டு உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியை போன்று உள்நாட்டு சந்தையையும் வசப்படுத்துவதற்காக ஐ.கே.எப்., சார்பில் கண்காட்சி நடத்தப்படுவது பாராட்டத்தக்கது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்:சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடை தொழில் வளர்ச்சியால், மாவட்டமாக உயர்ந்துள்ளது. அனைவரின் கூட்டு முயற்சியாலேயே வர்த்தக வளர்ச்சி சாத்தியமானது. ஆடை உற்பத்தி துறை மென்மேலும் உயர, இத்தகைய கண்காட்சிகள் கைகொடுக்கும்.'கிளாசிக்போலோ' குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சிவராம்:திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்புக்கு இணையான அளவில் உள்நாட்டுக்கான ஆடை வர்த்தகமும் நடக்கிறது; இது பலருக்கும் தெரியாது. ஏற்றுமதி ஆடைகளைவிட, உள்நாட்டுக்காக தயாரிக்கும் ஆடைகள் தரம் மிகுந்தவையாக இருப்பது அவசியம்;

இல்லையெனில், அனுப்பிய ஓரிரு நாட்களிலேயே ஆடையை திருப்பி அனுப்பிவிடுவர்.ஆண்டுக்கு 500 கோடி முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் மேற்கொள்ளும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். ஆனால், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ளும் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை பலருக்கும் தெரிவதில்லை; அவர்கள், சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த கண்காட்சி மூலம், உள்நாட்டுக்காக ஆடை தயாரிக்கும் நிறுவனங்களின் வர்த்தகம் மேலும் விரிவடையும். இந்தியாவில், கோடை, குளிர் கால ஆடை வர்த்தகம் பிரதானமாக உள்ளது. எனவே, ஆண்டுக்கு இரண்டு தேசிய ஆடை வர்த்தக கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களை அதிக எண்ணிக்கையில் திருப்பூரை நோக்கி வரச் செய்யவேண்டும். அடுத்த கண்காட்சியின்போது, நாட்டின் பல்வேறு ஆடை வர்த்தகர் சங்கங்களை பங்கேற்கச் செய்யவேண்டும்.


latest tamil news


'சைமா' துணை தலைவர் கோவிந்தப்பன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'டீமா' தலைவர் முத்துரத்தினம், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டிப்' தலைவர் மணி, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் உட்பட தொழில் அமைப்பு பிரதிநிதிகள், கண்காட்சியை வாழ்த்தி பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-202221:01:53 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 .....
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
20-ஆக-202210:57:28 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஏன் கண்ணை ரொம்ப உருத்துதோ ஒன்றிய அரசின் ஜால்ரா குரூப்புக்கு
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
20-ஆக-202210:56:58 IST Report Abuse
தஞ்சை மன்னர் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X