பள்ளியை மாணவரை வைத்து துாய்மைப்படுத்தக் கூடாது: பள்ளிக் கல்வி துறை

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 20, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: பள்ளிக் கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக சுற்றிக்கையில் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:எல்லா பள்ளிகளிலும் மரங்கள் உள்ளன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டட மேற்கூரையில் விழுந்து குப்பையாக சேர்ந்துள்ளது. பல பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தெரிய வருகின்றது. மழையின்போது
பள்ளியை மாணவரை வைத்து துாய்மைப்படுத்தக் கூடாது: பள்ளிக் கல்வி துறை

சென்னை: பள்ளிக் கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக சுற்றிக்கையில் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:


எல்லா பள்ளிகளிலும் மரங்கள் உள்ளன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டட மேற்கூரையில் விழுந்து குப்பையாக சேர்ந்துள்ளது. பல பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தெரிய வருகின்றது. மழையின்போது இக்குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகளை அகற்ற வேண்டும்.


ஒவ்வொரு பள்ளியிலும் கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறு உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.


பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது.latest tamil news

பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள், பணியாளர்களை கொண்டு இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்களை அணுகிப் பெற்று, பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்.


நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (12)

S.kausalya - Chennai,இந்தியா
20-ஆக-202220:43:43 IST Report Abuse
S.kausalya 1960 Kalil palli மாணவர், மாணவிகள் தான் வகுப்பறையை சுத்தம் செய்தோம். கரி, ஊமத்தம் இலை கொண்டு பேஸ்ட் போல் செய்து karumbalagaiyai தயார் செய்வோம். பானையில் தண்ணீர் பிடித்து வைப்போம். ஒரு ஒரு குருப்பாக பிரிந்து வேலை செய்வோம். சந்தோசமாக இருந்தது. பெற்றோரிடம் நாங்கள் இது குறித்து muraiyittadhillai. அப்படியே சொன்னாலும் எல்லோரும் செய்கிறார்கள் அல்லவா நீயும் நானும் செய்ய தான் வேண்டும் என்பார்கள். ஆசிரியரிடம் பெற்றோர் கொண்டு வந்து சேர்க்கும்போது பிள்ளை ஏதாவது சேட்டை செய்தால், கண் இரண்டை விட்டு மத்த இடத்ததை தோல் உரியுங்கள் என்பார்கள். அதற்காக ஆசிரியர்கள் ரொம்பவும் தண்டனை தர மாட்டார்கள். ஆனால் பயம் கலந்த மரியாதைஆசிரியர்கள் மேல் வெகு காலத்திற்கு இருந்தது. இப்போது ஆசிரியர்களும் சரியாக இல்லை. பெற்றோரும் தங்களும் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பது இல்லை. நமது பெற்றோர் நம்மை மிகவும் கண்டித்து வளர்த்தனர். ஆனால் நம் பிள்ளைகளை நாம் செல்லமாக வைத்து கொள்ள வேண்டும் என்று அதீத பாசம் காட்டி வளர்க்கின்றனர். எனவே ஒரு சிறு சொல் சொன்னாலே பிள்ளைகளுக்கும் அது பெரிய தப்பாக தெரிகிறது. நமக்கு நம் பெற்றோர் நிறைய குழந்தைகள் இருந்ததால், கேட்டதை வாங்கி தரவில்லை. எனவே நாம் ஒரு பிள்ளையுடன் நிருத்தி கொண்டு, அவன் கேட்பதை எல்லாம் வாங்கி தந்து அவனை சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும் என்று இப்போதைய பெற்றோர் நினைக்கிறார்கள். மாணவ மணிகளும் மனம் போன போக்கில், தவறான பாதையில் ஒரு ஜாலிக்காக போக ஆரம்பித்து வாழ்க்கையை கெடுத்து கொள்கிறார்கள். இனி இதை ஒரு எல்லாம் சரி செய்வது கடினம். இதில் பள்ளியை சுத்தம் செய்ய யார் சொல்ல போகிறார்கள்?
Rate this:
Cancel
GSR - Coimbatore,இந்தியா
20-ஆக-202220:34:32 IST Report Abuse
GSR Wrong Psychology is most popular in India as Right Psychology. Unwillingness to realise, rules mind
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
20-ஆக-202219:43:11 IST Report Abuse
Priyan Vadanad அபத்தம். பொது சேவையை எங்கேதான் கற்று கொள்வது? போகிற போக்கை பார்த்தால் வீட்டு வேலைகளை குழந்தைகள் செய்யக்கூடாது என்று சொல்வார்கள் போல தெரிகிறது. ஆனால் எல்லாத்தரப்பு குழந்தைகளும் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டும் . பாகுபாடும் பாரபட்சமும் இருக்கக்கூடாது என்பது வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X